Monday, March 10, 2008
இந்து மதம் எங்கிருந்து வந்தது?
பேசும் தமிழகம்
இந்து மதமும் பெண்களும் (பாகம் 1)
சில மாதங்களிற்கு முன்பு திருமண மந்திரங்கள் பற்றிய ஒரு பதிவை சில தளங்களில் எழுதினேன். இதையடுத்து நான் எழுதியது சரியா என்று ஒரு விவாதம் ஏற்பட்டது. ஒரு பத்திரிகையில் இந்த மந்திரங்கள் பற்றி எழுதிய போது, யரோ ஒரு பார்ப்பனர் "மந்திரங்கள் புனிதமானவை, அதை குற்றம் சொல்லக் கூடாது" என்று ஒரு கடிதம் மட்டும் எழுதியிருந்தார். வேறு எந்த விளக்கமும் எழுதவில்லை.ஆனால் கருத்துக் களங்களில் திருமண மந்திரங்கள் பற்றிய என்னுடைய கருத்து தவறு என்று சிலர் வாதிட்டார்கள். சில விளக்கங்களை முன்வைத்தார்கள். அவைகளுக்கு பதில் அளிக்க முனைந்த பொழுதே, அது நீண்டு இப்படியான ஒரு தொடருக்கு வித்திட்டது. அந்த வகையில் இந்தத் தொடருக்கு காரணமான திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பற்றி முதலில் ஒரு முறை பார்ப்போம்.தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் எந்த ஒரு விடயத்தையும் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்வது என்றாலும், சொல்லப்படுவதன் அர்த்தத்தை புரிந்து கொண்டுதான் செய்வார்கள்.ஆனால் நாமோ பிறப்பில் இருந்து இறப்பு வரை மதத்தின் பெயரில் எமக்கு தெரியாத ஒரு மொழியிலேயே அனைத்து சடங்குகளையும் செய்து வருகிறோம். உண்மையில் இந்தச் சடங்குகளும், அதில் சொல்லப்படும் மந்திரங்களும் எம்மை இழிவுபடுத்துவதை நாம் உணர்ந்து கொள்வதும் இல்லை. உணர்ந்து கொள்ள விரும்புவதும் இல்லை.திருமணத்தின் போது சொல்லப்படும் சில மந்திரங்களை பார்ப்போம்'சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோவிவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதிதுரியஸ்தே மனுஷ்ய ஜாஹ'இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.நீ முதலில் சொமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.இதை பல பார்ப்பனர்களே இன்று ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்களை ஏமாற்றி தலையில் மிளகாய் அரைப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ள சிலர் வேறு அர்த்தம் சொல்வார்கள்.அதாவது மந்திரத்தில் உள்ள "பதி" என்ற சொல் கணவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது இல்லை. பாதுகாவலன் என்ற அர்தத்தில்தான் சொல்லப்படுகிறது. "முதலில் சந்திரன் அவளை பாதுகாத்தான், பின்பு கந்தர்வன் பாதுகாத்தான், பின்பு அக்னி பாதுகாத்தான்" என்று ஒரு விளக்கத்தை இவர்கள் சொல்வார்கள். பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சிக்கு அமைய இந்த மந்திரங்கள் அமைக்கப்பட்டது என்று "அறிவியல்" விளக்கம் வேறு தருவார்கள்.சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சோமன், கந்தர்வன், அக்னி ஆகியோர் அந்தப் பெண்ணிற்கு தந்தையாக இருந்தார்கள் என்று சொல்வார்கள்.ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் ஒரு பெண்ணிற்கு "பதி" என்பது அவள் கணவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அத்துடன் அதே வேதங்களிலும் புராணங்களிலும் "பொம்பிளைப் பொறுக்கிகளாக" சொல்லப்படுகின்ற சோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்களின் "பாதுகாப்பில்" தன்னுடைய மனைவி இருந்தாள் என்பது குறித்து எந்தக் கணவன் மகிழ்ச்சி அடைவான் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.திருமண மந்திரங்கள் இவற்றுடன் முடிந்து விடவில்லை. தொடர்ந்து வருகின்ற திருமண மந்திரங்கள் இவர்கள் சொல்கின்ற இந்த மோசடி விளக்கத்தை சுக்கு நூறாக உடைக்கின்றன.உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வாஅந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜஉதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடேஅந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்திஇந்த மந்திரங்களின் பொருள் என்னவென்று தெரியுமா?விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே! இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக!உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக! என் மனைவியை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைப்பாயாக!இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறான் அல்லவா! விஷ்வாவஸாகிய உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பின் வீட்டில் இருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாத கன்னிகையை நீ விரும்பவாயாக! உன்னுடைய அந்தப் பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்று அறிவாயாக!இப்பொழுது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! மணமகளிற்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து பாதுகாவலனாக விளங்கிய கந்தர்வனுக்கு அந்தப் பெண்ணின் படுக்கையில் என்ன வேலை?நான் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். சோமன், அக்னி, கந்தர்வன் போன்றவர்களை மணமகளின் கணவர்கள் என்றுதான் மந்திரம் சொல்கிறது. இவற்றை விட மணமகளை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி, பின்பு புரோகிதம் சொல்லும் பார்ப்பானுக்கு மனைவியாக்கி, இவற்றிற்கு எல்லாம் கணவனின் சம்மதம் பெற்று... இப்படி இந்த மந்திரங்கள் நீண்டு செல்கின்றன.இவைகள் இருக்கட்டும். வேறு சில திருமண மந்திரங்களை பார்ப்போம்.தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்ஸாம் பீஜம் மனுஸ்யா பவந்த்தீயான ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.இன்னும் ஒரு மந்திரம்:விஸ்ணுர் யோனி கர்ப்பயதுதொஷ்டா ரூபானி பீமிசதுஆரிஞ்சது ப்ரஜாபதிதாதா கர்ப்பந்தாதுஇதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? )உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.ஒன்றிற்கு மூன்று தெய்வங்கள் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து கொண்டு எல்லாம் சரியாக பொருந்துகிறதா என்று காவல் காக்கிறார்கள் என்றால், ஒரு பெண் வல்லுறவிற்கு உட்படுத்தம்படும் போது, அதை தடுத்தால் மிகப் பெரிய உபகாரமாக இருக்குமல்லவா? அதற்கும் ஏதாவது மந்திரங்கள் சொன்னால் நன்றாக இருக்குமே!இப்படியான மந்திரங்களை சொல்லி நடக்கின்ற திருமணங்களையே எமது தமிழர்கள் செய்கிறார்கள். இவைகளை விட்டு திருக்குறள் சொல்லி திருமணங்கள் செய்யுங்கள் என்றால், "கடவுள், மதம்" என்று அடம்பிடிக்கிறார்கள்.தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?திருமண மந்திரங்கள் ஒரு மணமகள் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தப்படுகிறாள் என்பதை பார்த்தோம். எம்மை ஈன்றெடுத்த தாயையே இந்த மந்திரங்கள் மிக மோசமாக கொச்சைப்படுத்துகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?மணமுடிக்கப் போகின்றவளை ஏற்கனவே பலருக்கு மனைவியாக இருந்தவள் என்றும், அவர்களோடு படுக்கையில் இருந்தவள் என்றும் சொல்லி கொச்சைப்படுத்தும் திருமணங்களை பார்த்தோம்.இனி எம்மை ஈன்றெடுத்த தாயையே கொச்சைப் படுத்துகின்ற இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம்.மதத்தை தாய் தந்தையுடன் ஒப்பிட்டுப் பேசுகின்ற பலரை நான் கண்டிருக்கிறேன். அவர்களுடைய பார்வையில் மதம் என்பது தாய் தந்தை போன்றது. எப்படி நாம் தாய் தந்தையை மாற்ற மாட்டோமோ, எப்படி நாம் தாய் தந்தை மீது சந்தேகம் கொள்ள மாட்டோமோ அதே போன்று மதத்தை மாற்றவோ, அதன் மீது சந்தேகம் கொள்ளக் கூடாது என்பது அவர்களுடைய வாதம்.மதம் மாறுவது எனக்கும் ஏற்புடையது அன்று. ஒரு குப்பையில் இருந்து இன்னொரு குப்பைக்குள் போவது முட்டாள்தனமானது. மதங்கள் என்ற குப்பைகளை விட்டு வெளியே வந்த நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.ஆனால் மதம் மாறக் கூடாது, மதம் பற்றி கேள்வி எழுப்பக் கூடாது என்று சொல்வதற்காக தாய், தந்தையுடன் மதத்தை ஒப்பிடுவது மிக அபத்தமானது.மதம் குறித்து என்னுடன் வாதிட்ட ஒருவர் "அத்தாட்சிப் பத்திரம் காட்டினால்தான் நீங்கள் உங்களுடைய அப்பா, அம்மாவை நம்புவீர்களா?" என்றெல்லாம் ஆவேசமாக கேள்வியை எழுப்பினார். இன்னொருவர் நான் அப்பாவையே மாற்றி விட்டேன் என்று மறைமுகமாக என்னுடைய தாயை வசைபாடினார். இப்படியானவர்களைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது.இவ்வாறான கேள்விகளை மதவெறியுள்ளவர்களும் சிந்தனை வறட்சியுள்ளவர்களுமே கேட்பதால், அவர்களுக்கு உண்மையை புரிய வைப்பதும் மிகக் கடினமானதாகவே இருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லோரும் நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாவது போன்று இவர்களுடைய இந்த மதமே "அப்பன் பேர் தெரியாதவன்" என்று இவர்களை சொல்வதுதான் இதில் வேதனையான வேடிக்கை.எம்மவர்கள் சம்பிரதாயம் என்ற பெயரில் செய்கின்ற பல முட்டாள்தனமான விடயங்களில் இறந்தவருக்கு திதி கொடுப்பதும் ஒன்று. என்ன செய்வது? பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பார்ப்பான் வந்து சமஸ்கிருதத்தில் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் திட்டிவிட்டுப் போனால்தான் தமிழனுக்கு நிம்மதியாக இருக்கின்றது.இப்பொழுது இறந்தபின் நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்,யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதாதன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோபபத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹாரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமமகிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண...இந்த மத்திரத்தின் அர்த்தம்:என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்கு பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாது என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தை பெறட்டும். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம் என்று இந்த மந்திரம் சொல்கிறது. உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம், நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம் என்று இந்த "புனித" மந்திரம் சொல்கிறது.தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினத்து விடாதீர்கள். இந்து மதம் தாய்க்கு செய்கின்ற திவசத்திலும் வஞ்சகம் வைக்கவில்லை. அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இதுஎன்மே மாதா ப்ரவது லோபசரதிஅன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹபிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹாஅவபத்ய நாம....என்னுடைய அம்மா யாருடன் படுத்த என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் போய் சேரட்டும்.உண்மையில் இந்த மந்திரம் அர்த்தம் அற்றது. தாய்க்கு கொடுக்கின்ற திதியில் தந்தை யார் என்ற கேள்வி எழத் தேவையில்லை. தந்தைக்கு திதி கொடுக்கின்ற போதாவது தாய் சோரம் போயிருந்து, அதனால் உண்மையான தந்தை வந்து விட்டால் என்னாவது என்ற கேள்வியோடு அந்த மந்திரத்தை தொடர்புபடுத்தலாம். ஆனால் தாயக்கு கொடுக்கும் திதியிலும் அவள் சோரம் போயிருக்கலாம் என்று சொல்வதற்கு அவசியமே இல்லை. ஆயினும் மந்திரம் அப்படித்தான் சொல்கிறது.எந்த மதத்தை தாய், தந்தையோடு ஒப்பிட்டு உறுதியாக நம்புகிறீர்களோ, அந்த மதத்தின் சம்பிரதாயங்களே உங்களுடைய அம்மாவை "நம்பத்தகாதவள்" என்கிறது. நடத்தை கெட்டவளாக இருக்கலாம் என்கிறது. நீங்கள் வேறு அப்பனுக்கு பிறந்திருக்கலாம் என்கிறது. சம்பிரதாயம் என்று பிதற்றுபவர்களுக்கும், மதத்தை பெற்றோரோடு ஒப்பிடுபவர்களுக்கும் இதை விட வேறு கேவலம் ஏற்படப் போவதில்லை.இந்த மந்திரங்கள் பற்றிய விவாதம் ஒன்றில் ஒருவர் என்னிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். "இந்த மந்திரங்களை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளில் சொல்ல மாட்டார்களா? அப்படிச் சொன்னால் தங்கள் வீட்டுப் பெண்களை கேவலப்படுத்துவது போன்று இல்லையா? பார்ப்பனர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?" இவ்வாறான கேள்விகளை அடுக்கினார்.இங்கேதான் நாம் சில விடயங்களை சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். இந்த மந்திரங்களில் ஒரு விடயத்தை கவனித்திருப்பீர்கள். திருமண மந்திரங்கள் மணமகனை கொச்சைப்படுத்தவில்லை. மணமகளைத்தான் கொச்சைப்படுத்துகின்றன. ஈமச் சடங்கின் மந்திரங்கள் தந்தையை கொச்சைப்படுத்தவில்லை. தாயைத்தான் கொச்சைப்படுத்துகின்றன.இப்படி மந்திரங்கள் பெண்களைத்தான் கொச்சைப்படுத்துகின்றன. இது ஏன்? இந்து மதத்திற்கு பெண்ணின் மேல் அப்படி என்ன வெறுப்பு? இனி இதற்கான காரணங்களைப் பார்ப்போம்.மந்திரங்களில் பெண் இழிவுபடுத்தப்படுவதற்கு காரணம் என்ன என்பதை இனிப் பார்ப்போம். இந்து மதத்திற்கு பெண்கள் மீது வெறுப்பு ஏன் உருவானது என்பதை பார்ப்பதற்கு முன், இந்த மதத்தின் மற்றைய நூல்கள் பெண்களைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதையும் பார்த்து விடுவோம்.இந்த மத வேதங்களின் படி பெண் என்பவள் ஒரு கீழான பிறவி. சூத்திரர்கள் எப்படி கீழான பிறவிகள் என்று இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் சொல்கிறதோ, அதே போன்றுதான் பெண்களும் கீழான பிறவிகள். பல இடங்களில் சூத்திரர்களை விடவும் மிகக் கீழான நிலையில்தான் பெண்களை இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் வைத்திருக்கின்றனஇந்த இடத்தில் சுருக்கமாக இன்னும் ஒரு விடயத்தைப் பார்ப்போம்.இஸ்லாமியர்கள் குர்ரானையும் கிறிஸ்தவர்கள் பைபிளையும் கொண்டு இந்திய துணைக் கண்டத்திற்குள் நுழைந்த பொழுது, பார்ப்பனர்களுக்கு அதைப் போன்று எந்த நூலை தங்களுடைய பார்ப்பனிய இந்து மதத்தின் மதநூலாக காட்டுவது என்று தெரியவில்லை.பொதுவான இந்து மதம் என்கின்ற ஒன்று இல்லாத பொழுது, அதற்கு என்று எப்படி ஒரு பொதுவான மதநூல் இருக்க முடியும்?என்றாலும் பார்ப்பனர்கள் மனுதர்மத்தையும், பகவத்கீதையையும் இந்து மத "பைபிள்களாக" முன்வைத்தார்கள். பார்ப்பனிய மதம்தான் இந்து மதம் என்று பார்க்கின்ற போது இது ஒரு சரியான செயல்தான். மனுதர்மம், பகவத்கீதை போன்றவைகள் வேறு மொழிகளிலும் அச்சிடப்பட்டன.உண்மையில் இன்று வரை இந்து மதம் மனுதர்மத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஆலய வழிபாடுகள், விழக்கள், சடங்குகள் என்று அனைத்துமே மனுதர்மம் வகுத்துக் கொடுத்தன்படிதான் இயங்குகிறது. இதை விட முக்கியமாக அரசுகள் கூட மனுதர்மத்தின் அடிப்படையில் இயங்க வைக்கப்பட்டன.மனுநீதி சோழன் போன்ற சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். மனுதர்மம்தான் மனுநீதி. மனுதர்மத்தின் படி பார்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்களின் ஆலோசனைப்படி ஆட்சி செய்த சோழனை "மனுநீதிச் சோழன்" என்று அழைத்தார்கள்.இந்த இடத்தில் இன்னும் ஒரு சிறு தகவல். பல நாடுகளை வென்று ஆசியாவின் பெரும் வல்லரசாக விளங்கிய சோழப் பேரரசு வீழ்ந்ததும் இந்த "மனுதர்ம" பார்ப்பனர்களினால்தான். பல போர்களைப் புரிந்ததால், பல பாவங்கள் சேர்ந்து விட்டதாக சோழ மன்னன் நம்பவைக்கப்பட்டான். அந்தப் பாவங்களைப் போக்குவதற்கு பார்ப்பனர்களுக்கு நிறைய தானங்கள் கொடுக்க வேண்டும் என்று பார்ப்பனர்களால் அவனிடம் சொல்லப்பட்டது. பார்ப்பனர்களுக்கு பொன்னும், பொருளும், நிலமும் வழங்கி, மிகுதிப் பணத்தில் கோயில்களும் கட்டி சோழப் பேரரசு தன்னுடைய பலத்தை இழந்து வீழ்ச்சி கண்டது. இதை பின்பு தனியாகப் பார்ப்போம்.இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருகிறேன்.மனுதர்மம் பலரால் கிழி கிழியென்று கிழிக்கப்பட்டு துவைத்துக் காயபோடப்பட்டு விட்டதால், தற்பொழுது மனுதர்மத்தை முன்னிறுத்துவதைக் குறைத்துக் கொண்டு பகவத் கீதையை முன்னிறுத்தி வருகிறார்கள்.இந்த மனுதர்மமாக இருக்கட்டும் அல்லது பகவத் கீதையாக இருக்கட்டும் அல்லது மற்ற வேதங்களாக இருக்கட்டும், பெண்ணைப் பற்றி என்ன சொல்கிறது? முதலில் மனுதர்மம் சொல்கின்ற சில விடயங்களைப் பார்ப்போம்.மனுதர்மமத்தின் தொடக்கம் ஏறக்குறைய பைபிள் போன்றுதான் இருக்கிறது. பைபிளைப் போன்றே உலகம் உருவான கதையில் தொடங்குகிறது. பின்பு ஒவ்வொரு வர்ணத்தினருடைய கடமைகள், குணங்கள், பாவங்கள், தண்டனைகள் என்று விரிகிறது.இதிலே 9வது அத்தியயாம் பெண்களைப் பற்றி பேசுகிறது. 9வது அத்தியாயத்திலே மனுதர்மம் பெண்கள் பற்றி சொல்கின்ற சில விடயங்களைப் பார்ப்போம்.பெண்கள் இளமைப் பருவத்தில் தந்தையாலும் பின்பு கணவனாலும், மூப்பில் மைந்தனால் காக்கப்படுபவர்கள். அவர்கள் சுயமாக இயங்கும் தன்மை உடையவர்கள் அல்லர்.(சுலோகம் 3)பெண்கள் கற்புநிலை அற்றவர்களாகவும், நிலையான மனம் அற்றவர்களாகவும், நட்புத்தன்மை அற்றவர்களாகவும் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.(சுலோகம் 15)இந்தச் சுபாவம் பெண்களைப் படைக்கின்ற போதே பிரம்மனால் கொடுக்கப்பட்டிருக்கிறது(சுலோகம் 16)படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகசிந்தனை போன்றவைகள் பெண்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது(சுலோகம் 17)பெண்களுக்கு என்று மந்திரங்கள் இல்லை. பெண்களுக்கு மனச்சுத்தி கிடையாது. பெண்களின் பாவத்தை போக்குவதற்கான மந்திர உபதேசமும் கிடையாது. பெண்கள் பொய்யைப் போன்று பரிசுத்தம் அற்றவர்கள்(சுலோகம் 18)பெண்கள் சுயமாக இயங்குகின்ற தன்மை அற்றவர்கள். பெண்கள் இயற்கையாகவே நிலையான மனம் அற்றவர்கள். கற்பு நிலை அற்றவர்கள். காமம், கோபம், துரோகம் அனைத்தும் பெண்களுக்காவே படைக்கப்பட்டிருக்கிறது. இவைகைள எல்லாம் பெண்களைப் படைக்கும் போது பிரம்மன் அவர்களுக்காக உருவாக்கியுள்ளார். இந்தப் பாவங்களை மாற்ற முடியாது. அதற்கான மந்திரங்கள் எதுவும் எல்லை. பெண்கள் மந்திரங்களை ஓதவும் கூடாது. மனுதர்மம் பெண்கள் பற்றிச் இப்படித்தான் சொல்கிறது.இதை விட ஒரு பெண் ஒவ்வொரு ஜாதிக்காரனுடன் உறவு வைத்தால் என்ன தண்டனை, கணவனுக்கு பணிவிடை செய்யாவிட்டால் என்ன தண்டனை என்று மற்றைய சுலோகங்கள் நீண்டு, பெண்களை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அத்தனை தூரம் மனுதர்மம் அசிங்கப்படுத்துகிறது.இவை எல்லாவற்றிற்கும் மேலாக பெண் குழந்தைகளை பெறுவதையே குற்றம் என்றுதான் மனுதர்மம் சொல்கிறதுஒரு ஆண் எப்பொழுது தன்னுடைய மனைவியை "விவாகரத்து" செய்யலாம் என்று மனுதர்மம் விளக்குகிறது.மலடியான மனைவியை எட்டு வருடத்திற்குப் பின்பும், ஊனம் உள்ள பிள்ளையை பெறுபவளை பத்து வருடத்திற்கு பின்பும், பெண்களையே பெறுபவளை பதினொரு வருடத்திற்குப் பின்பும், தீங்கு சொல்பவளை உடனடியாகவே நீக்கி விட்டு வேறு விவாகம் செய்து கொள்க. நீக்கப்பட்ட மனைவியர்களுக்கு எந்தப் பொருளும் கொடுக்கத் தேவை இல்லை.(சுலோகம் 81)இந்து மத வேதங்கள், சாத்திரங்களின் படி பெண் இயற்கையாகவே கற்புநிலை அற்றவள். நிலையான மனம் அற்றவள். காமம் உடையவள். பெண் பிறப்பு ஒரு இழிவான பிறப்பு. அதை மந்திரங்களால் மாற்ற முடியாது. பெண் குழந்தையை பெறுவதே குற்றம்.இப்பொழுது ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். திருமணத்தில், ஈமச் சடங்கில் பெண் கற்பு அற்றவள் என்ற அடிப்படையில் சொல்லப்படும் மந்திரங்களின் அடிப்படை புரிகிறது அல்லவா?ஆயினும் உங்களுக்கு வேறு சில கேள்விகள் எழக் கூடும். இந்தத் தொடரை தொடர்ந்து படிக்கின்ற போது அவைகளுக்கான பதில்களையும் நீங்கள் பெறுவீர்கள்.மனுதர்மத்தை நல்ல புத்தி உள்ள யாருமே ஆதரிக்க மாட்டார்கள். அதை படிக்கின்ற போது குமட்டிக் கொண்டு வரும். ஆனால் மனுதர்மச் சிந்தனைதான் பார்ப்பனியத்தின் அடிப்படைச் சிந்தனை ஆகும்.மனுதர்மத்தின் இன்னொரு பிரதியான பகவத் கீதை பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை இப்பொழுது பார்ப்போம். பகவத் கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு பாப யோனயஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபி யாந்திபராம் கதிம்அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்களாம். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பகவத் கீதைகளில் "பாவ யோனி" என்பதை "கீழான பிறப்பு", "இழி பிறப்பு" என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் நேரடியாகவே "born out of the womb of sin" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.பகவத் கீதையின் பார்வையிலும் பெண் என்பவள் இழி பிறப்புத்தான். அவள் ஒரு பார்ப்பன வீட்டில் பிறந்திருந்தாலும், அது செல்லுபடியாகாது. கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான உரிமைகள் பெண்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளன.முற்பிறப்பில் செய்த பாவத்தின் பயனாகத்தான் ஒருவன் பெண்ணாகவோ சூத்திரனாகவோ பிறக்கிறான் என்றுதான் இந்து மத வேதங்கள் சொல்கின்றன. அந்த வகையில் சூத்திரர்களை இழிவுபடுத்துகின்ற வேதங்கள், சாத்திரங்கள், மந்திரங்கள் போன்றவை பெண்களையும் இழிவுபடுத்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை."இந்து மதமும் பெண்களும்" என்ற தொடர் முடிந்த பிற்பாடு பகவத் கீதை பற்றியும் தொடராக எழுத இருப்பதால், தற்பொழுது பகவத் கீதையைப் பற்றி நான் அதிகம் எழுதாது மிகுதியை தொடர்கிறேன்.இந்து மதத்தைப் பற்றி அறிந்தவர்கள் ராமானுஜர் பற்றி அறிந்திருப்பார்கள். குறிப்பாக வைணவ சமய மக்களால் ராமானுஜர் கடவுளின் அவதாரம் என்று போற்றப்படுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் போடுவதில் பாரதிக்கு அவர்தான் அனேகமாக முன்னோடியாக இருக்க வேண்டும்.தாழ்த்தப்பட்ட மக்கள் பலரை பூணூல் அணிவித்து பார்ப்பனர்களாக ராமனுஜர் மாற்றுவித்தார் என்று அவரைப் பற்றிச் சொல்வார்கள். அனைவரும் பெருமாளின் குழந்தைகளே என்றும், பெருமாள் பக்தர்களுக்குள் வேறுபாடுகள் கிடையாது என்றும் பிரச்சாரம் செய்தவராக கருதப்படும் ராமனுஜர் பல நூல்களை எழுதியுள்ளார். அவைகள் வைணவத்தின் வேதங்களாக கருதப்படுகின்றன.ரிக், யதூர் போன்ற வேதங்களில் இருந்து பெறப்பட்ட மந்திரங்கள் பெண்ணை இழிவுபடுத்தியதைப் பார்த்தோம். மனுதர்ம சாத்திரத்தை பார்த்தோம். பகவத்கீதையைப் பார்த்தோம். இப்பொழுது இந்து மதத்தின் புராணம் ஒன்றையும். பார்ப்போம்.ஒரு முறை இந்திரன் விஸ்வரூபன் என்பவனைக் கொன்று விட்டான். விஸ்வரூபன் ஒரு பார்ப்பனத் தந்தைக்கும் அசுர குல தாய்க்கும் பிறந்தவன். விஸ்வரூபன் ஒரு பார்ப்பனின் பிள்ளை என்பதால், அவனைக் கொன்ற இந்தரனுக்கு தோசம் உண்டாகி விட்டது.தோசம் பிடித்ததால் இந்திரன் மிகவும் விகாரமான உருவோடு மிக அருவருப்பாகக் காட்சி அளித்தான். தன்னுடைய தோசத்தை எங்கே இறக்கி வைக்கலாம் என்று அவன் தேடித் திரிந்தான்.இந்திரன் தன்னுடைய தோசத்தை எங்கே இறக்கி வைத்தான் தெரியுமா?பார்ப்பனன் ஒருவனுடைய மகனைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோசம் பிடித்து விட்டது என்று கடந்த தொடரில் பார்த்தோம் அல்லவா? இப்பொழுது தன்னுடைய தோசத்தை இந்திரன் எப்படி தீர்த்துக் கொள்கிறான் என்று பார்ப்போம்.இந்திரன் மிகவும் விகார உருவத்தோடும் செல்வம், பொலிவு அனைத்தும் இழந்து அலைந்து கொண்டிருந்தான். தன்னுடைய தோசத்தை யாரிடமாவது இறக்கி வைத்தால், தன்னுடைய தோசம் போய்விடும் என்று இந்திரனுக்கு தோன்றியது.முதலில் இந்திரன் பூமாதேவியிடம் போனான். தன்னுடைய தோசத்தை பெற்றுக் கொள்ளும்படி வேண்டினான். பூமாதேவி தோசம் முழுவதையும் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டாள். வேண்டுமென்றால் தோசத்தில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்வதாக கூறினாள். பதிலுக்கு தான் கேட்கும் வரத்தை தரவேண்டும் என்று பூமாதேவி சொன்னாள்.இந்திரன் சம்மதித்து ஒரு பகுதி தோசத்தை பூமாதேவியிடம் இறக்கி வைத்தான். பூமிக்கு இப்படி பிரம்மஹத்தி தோசத்தில் ஒரு பகுதி வந்ததனால்தான் பூமியில் பல பாலைவனங்கள் உருவாகினதாம். தோசத்தை பெற்றுக் கொண்ட பூமாதேவி பூமி பிளந்தால் மீண்டும் ஒன்றாக சேருகின்ற வரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டாள்.இந்திரன் அடுத்ததாக மரங்களிடம் போனான். மரங்களிடம் ஒரு பகுதி தோசத்தை கொடுத்தான். மரங்களிற்கு தோசம் வந்ததால்தான் அதில் இருந்து பசை வடிகிறதாம். மரம் தன்னுடைய கிளைகள் வெட்டுப்பட்டால் மீண்டும் முளைக்கும் வரத்தை கேட்டுப் பெற்றது.கடைசியாக இந்திரன் பெண்களிடம் போகிறான். தன்னுடைய நிலையை சொல்லி பெண்ணிற்கு தன்னுடைய மிகுதி தோசத்தை கொடுக்கிறான்.பெண் பிரம்மஹத்தி தோசத்தை கொண்டதால் என்ன ஆனது தெரியுமா? பார்ப்பனனின் மகனை கொலை செய்த தோசத்தை பெண்கள் பெற்றுக் கொண்டதால், அவர்களுக்கு மாதவிடாய் வரத் தொடங்கியது.தோசத்தை பெற்றுக் கொண்ட பெண் கர்ப்பமாய் இருக்கும் காலத்திலும் ஆண் சுகம் வேண்டும் என்ற வரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டாள். வரத்தை இந்திரன் அருளினான். பொதுவாக மிருகங்கள் கர்ப்ப காலத்தில் ஒன்று சேராது. ஆனால் மனிதர்களுக்கு அப்படியில்லை. மனிதர்களால் கர்ப்பமாக இருக்கும் காலங்களிலும் சேர முடியும். இதற்கு காரணம் தோசத்தைப் பெற்றுக் கொண்ட பெண் அதற்கு ஈடாக இந்திரனிடம் பெற்ற வரந்தானாம்.இந்து மதம் என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனிய மதத்தில் ஒன்றை நீங்கள் கவனிக்கலாம். அந்த மதத்தில் உள்ள அனைத்து தத்துவங்களுமே பார்ப்பனர் உயர்ந்தவர் என்றும் மற்றவர் இழிபிறப்புகள் என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கும். ஒரு பார்ப்பனனுக்கு தீங்கு செய்ததால்தான் பூமியில் பாலைவனங்கள் உருவாகின என்றும், மரங்களில் பாசை வடிகிறது என்றும், பெண்களுக்கு மாதவிடாய் வருகிறது என்றும் ஒரு செய்தியையும் இந்தப் புராணக் கதை சொல்கிறது.இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். தொடரைப் படித்த சிலர் இந்து மதத்தின்படி ஆண்கள்தான் உயர்ந்தவர்களா என்று என்னிடம் கேட்டிருந்தார்கள். அது தவறு. பார்ப்பன ஆண்கள் உயர்ந்தவர்கள் என்பதுதான் சரி. இதைத்தான் இந்து மதம் அனைத்து வேதங்களிலும், சாத்திரங்களிலும், புராணங்களிலும் வலியுறுத்துகிறது. பார்ப்பன ஆண்களை தவிர மற்றைய அனைவரும் தாழ்ந்தவர்கள். இழி பிறப்புக்கள். பெண்கள் எந்த வர்ணமாக இருந்தாலும் இழிவானவர்கள்.மனுதர்மம், பகவத் கீதை, வேதங்கள், சாத்திரங்கள் இந்து மத இதிகாசங்கள் என்று அனைத்தும் பெண்கள் பற்றிச் சொல்கின்ற கருத்துக்களையே மேற்கண்ட புராணக் கதையும் சொல்கிறது.நாம் மனுதர்மத்திலும் பகவத் கீதையிலும் சில உதாரணங்களைப் பார்த்தோம். அவைகளின் கருத்துப் படி பெண் இழி பிறப்பானவள். காம குணம் உள்ளவள். கற்பு நிலையற்றவள்.ஏன் பெண் இழிபிறப்பானவள்? அவள் பிரம்மஹத்தி தோசத்தை பெற்றிருக்கிறாள்.பெண் காம குணம் உள்ளவளா? ஆம், அவள் மாதவிடாயால் மூன்று நாட்கள் ஆண்சுகத்தை பெற முடியாது என்று அறிந்து அதற்குப் பதிலாக, கர்ப்ப காலத்திலும் ஆண்சுகத்தை பெறுவதற்கு வரம் வேண்டியிருக்கிறாள்ஏற்கனவே நாம் பார்த்த சுலோகங்கள் சொல்கின்ற அதே கருத்தை இந்தக் கதையும் திருப்பிச் சொல்வதை கவனித்துப் பாருங்கள்.இப்படி பெண்களை இழிபிறப்புகளாகவும் காமப்பிசாசுகளாகவும் இந்து மதம் கருதுவதால்தான், மந்திரங்களில் பெண்ணிற்கு நிறையக் கணவர்கள் உண்டு என்றும், பெண் அவளுடைய பிள்ளையை வேறு ஆடவனுக்கு பெற்றிருக்கக்கூடும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.ஆனால் இந்து மத ஆச்சாரியார்களுக்கு பெண் மீது இத்தனை வெறுப்பு வந்ததற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அது என்ன காரணம் என்ற கேள்வி உங்களுக்கு வரக் கூடும். வர வேண்டும். கேள்விகள் வந்தால்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம்.அதற்கு பதிலை சொல்வதற்கு முன்பு இன்னும் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். பெண் பற்றிய பிரச்சனையால் இந்து மதத்தில் ஒரு பெரும் பிளவே ஏற்பட்டது. அதை முதலில் பார்ப்போம்.புராணங்களை கதைகள் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அந்தக் கதைகளின் அடிப்படையில்தான் தமது சடங்குகளையும் விழாக்களையும் இந்துக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.இந்து மதம் என்பது வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் ரிக், யதூர் போன்ற வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. அதன் மூலம் இந்த வேதங்கள் பெண்களை இழிவுபடுத்துவதைக் கண்டோம்.மனுதர்ம சாத்திரத்தையும் உதாரணம் எடுத்துப் பார்த்தோம். பகவத்கீதையையும் உதாரணத்திற்கு எடுத்தோம். பின்பு ஒரு புராணக் கதையையும் உதாரணத்திற்கு எடுத்தோம். எல்லாமே பெண்களை இழிவுபடுத்துகின்றன. பெண் தாழ்ந்த பிறப்பு என்று சொல்கின்றன. கற்பு அற்றவர்கள் என்கின்றன. தோசம் உள்ளவள் என்கின்றன.நாம் பார்த்த புராணக் கதையின் படி பெண்ணினுடைய தோசம்தான் மாதவிடாயாக வெளிப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் தீட்டு என்று சொல்லி தள்ளி வைப்பதன் காரணம் இதிலிருந்துதான் வந்தது.பெண்களை மூன்று நாட்களும் தள்ளி வைப்பதற்கு இன்றைக்கு சிலர் அசுத்தம், ஆரோக்கியம், அது, இது என்று விஞ்ஞான விளக்கங்கள் தருவார்கள். ஆனால் அவைகள் உண்மை இல்லை.மேற்குநாட்டுப் பெண்கள் வீட்டில் தள்ளி இருப்பது இல்லை. அங்கு யாரையும் எந்தக் கிருமியும் பாதிக்கவில்லை. இன்றைக்கு பெண்கள் தமது மாதவிடாய் காலங்களிலும் பல ஆயிரம் பேர் வேலை செய்யும் தொழிற்சாலைகளிற்கு சென்று வேலை செய்கின்றார்கள். அங்கும் யாரையும் எந்தக் கிருமியும் பாதிக்கவில்லை.ஆனால் இன்றைக்கும் மாதவிடாய் உள்ள ஒரு இந்துப் பெண்ணால் ஒரு கோயிலிற்கு சென்று வழிபட முடியாது. கோயிலில் யாரும் இல்லாத நேரத்தில் கூட போக முடியாது. தீட்டு என்று சொல்லி தடுத்து விடுவார்கள். மாதவிடாய் என்பது பெண்ணினுடைய தோசத்தின் வெளிப்பாடு என்று இந்து மதம் உறுதியாக நம்புவதே இதற்கு காரணம். ஒரு புராணக் கதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு இது ஒரு உதாரணம்.புராணங்களை வெறும் கதைகள் என்று தூக்கி எறியாது, அதை உண்மை என்று நம்பி தொடர்ந்தம் அவைகளை இந்து மதம் கடைப்பிடித்து வருவதாலேயே நாமும் அது குறித்து பேச வேண்டி உள்ளது. இந்து மதம் சொல்வதும் செய்வதும் அனைத்தும் பெண்களுக்கு எதிரானதே.இந்த மதத்தில் பெண்ணை வைத்து ஒரு பிளவு ஏற்பட்டதாக சொல்லியிருந்தேன் அல்லவா? அதை இப்பொழுது பார்ப்போம்.இந்து மதத்தில் பல பிரிவுகள் இருப்பதாக சொல்வார்கள். அதிலே சைவம், வைணவம் போன்றவைகள் முக்கியமானவை. சைவத்திலும் வீரசைவம், சிந்தாந்த சைவம் என்ற பிரிவுகள் இருக்கின்றன. வைணவத்தில் தென்கலை, வடகலை என்று பிரிவுகள் இருக்கின்றன.வீரசைவம், சைவசிந்தாந்தம் போன்ற பிரிவுகளுக்கிடையில் பெரியளவில் சச்சரவுகள் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் வடகலைக்கும் தென்கலைக்கும் நடந்த பிரச்சனைகள் உலகப் பிரசித்தம். இன்றுவரை பல இடங்களில் இவர்களுக்குள் சர்ச்சைகள், பகையுணர்வுகள் உண்டு. ஒரு பிரிவினர் மற்ற பிரிவினருக்குள் திருமணம் செய்து கொள்வது என்பது வெகு வெகு குறைவு.வடகலை, தென்கலை பிரிவுகளை நாமங்களை வைத்துத்தான் இனம் காண்பார்கள். வடகலையினர் "Y" வடிவத்திலே நாமம் கீறி நடுவில் ஒரு கோடு போடுவார்கள். தென்கலையினர் "U" வடிவத்தில் நாமம் கீறி ஒரு கோடு போடுவார்கள்.இந்த நாமம் பற்றி இரு தரப்பும் தருகின்ற விளக்கம் ஒன்றுதான். நாமத்தின் இரு கரையும் உள்ள கோடுகள் பெருமாளின் பாதங்களாம். இரண்டு கோடுகளும் பெருமாளின் பாதங்கள் என்றால், நடுவில் சிவப்புக் வண்ணத்தில் உள்ள குறி எதுவென்று உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.சைவர்கள் ஆண்குறியை லிங்கம் என்று வணங்குவார்கள். வைணவர்கள் நெற்றியில் பூசுவார்கள். இதை பின்பு சந்தர்ப்பம் வரும் போது தனியாகப் பார்ப்போம்.இந்த வடகலை, தென்கலை நாமம் பற்றிய ஒரு சர்ச்சை வெகுபிரசித்தம். சிறிரங்கம், காஞ்சிபுரம் பெருமாள் கோயில்களில் நின்ற யானைகளுக்கு எந்த நாமம் போடுவது என்ற பிரச்சனை வந்து அது நீதிமன்றத்தில் நீண்ட காலம் இழுபட்டது.வெள்ளைக்காரர் காலத்தில் தொடங்கிய வழக்கு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் தொடர்ந்தது. சில நேரங்களில் ஒரு நாமத்திற்கு சார்பாக தீர்ப்பு வரும். ஆனால் அதற்குள் அந்த யானை இறந்து போயிருக்கும். இப்பொழுது புதிய யானைக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி நாமம் சாத்த மறு தரப்பு விடாது. அது பழைய யானைக்குத்தான் பொருந்தும், புதிய யானைக்கு எமது நாமத்தை சாத்தத்தான் வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றம் போவார்கள். அனேகமாக தீர்ப்பு வருவதற்கு முதல் அந்த யானையும் இறந்து போயிருக்கும்.இங்கிலாந்து நீதிமன்றங்கள் வரை இந்தப் பிரச்சனை போனது. வெள்ளைக்கார நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இதை "Y,U" பிரச்சனை என்றுதான் அழைப்பார்கள். இப்படி பல வேடிக்கைகளையும் பகைகளையும் உருவாக்கிய இந்த "Y,U" பிரிவுகள் ஏன் உருவாகின என்று தெரியுமா? இதற்கு காரணம் பெண் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
நன்றி: வெப்ஈழம்
மனுதர்ம சாஸ்திரமும் தமிழ் மன்னர்களும்
வடமொழியில் தர்ம சூத்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள் என்பவை சட்ட நூல்களாகும். இந்நூல்கள் செய்யுள் வடிவுக்கு மாறிய பின்னர் அவை ஸ்மிருதிகள் எனப் பெயர் பெற்றன. இவற்றின் எண்ணிக்கை 128 என்று கானே என்ற வடமொழி அறிஞர் குறிப்பிடுவார். இவை அனைத்திலும் பரவலாக அறிமுகமான ஸ்மிருதி ‘மனுஸம்ஹிதை’, ‘மாணவ தர்ம சாஸ்திரம்’ என்றழைக்கப்படும் மனுதர்ம சாஸ்திரமாகும்.மனுவின் காலம்மனு என்பவர் எழுதியதால் இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறினாலும் இந்நூலாசிரியரின் பெயர் சுமதி பார்கவா என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்நூலின் காலம் கி.மு.200க்கும் கி.பி.200க்கும் இடைப்பட்டது என்று பூக்லர் என்பவரும், கி.மு.170க்கும் 150க்கும் இடைப்பட்டது என்று அம்பேத்கரும் கருதுகின்றனர். கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்நூல் இறுதி வடிவம் பெற்றதாக ஆர்.எஸ். சர்மா கருதுகிறார். எப்படியாயினும் மன்னர்களின் பிராமணியச் சார்புக்கான சட்ட நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.மனுதர்மம் உருவான வரலாற்றுச் சூழல்மௌரியப் பேரரசின் படைத் தலைவனாக இருந்த புஷ்யமித்திரன் என்ற சாமவேதப் பிராமணன் நம்பிக்கைத் துரோகம் செய்து, மௌரிய மன்னனைக் கொலை செய்துவிட்டு சுங்க வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தான். இதன் பின்னர் பௌத்தம் கொடூரமான முறையில் ஒழிக்கப்பட்டது. கொலை செய்யப்படும் ஒவ்வொரு பௌத்த துறவியின் தலைக்கும் நூறு பொற்காசுகளை அவன் வழங்கினான். அசோகன் காலத்திலிருந்து தடை செய்யப்பட்டிருந்த வேதவேள்விகள் பெருகின. அத்துடன் வர்ணமுறை சாதியாக மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் பிராமணர்களை, தெய்வநிலைக்கு உயர்த்திப் பாதுகாக்கும் மனுதர்மம் உருவாகியுள்ளது.மனு செய்த கொடுமைநான்கு வர்ண அமைப்பானது, இறுக்கமான ஒன்றாக மனுவுக்கு முன்னர் இருக்கவில்லை. வருணம் என்பது மாற்றிக்கொள்ளத்தக்கதாக நெகிழ்ச்சியுடன் இருந்தது. ஆனால் இதை இறுக்கமான சட்டங்களாக மனு மாற்றியதுடன், நான்கு வருணங்களுக்கு அப்பால் ‘அவருணர்கள்’ (வருணமற்றவர்கள்) என்ற புதிய பிரிவை உருவாக்கி, ‘சண்டாளர்கள்’ என்ற பெயரையும் அதற்குச் சூட்டி, தீண்டாமை என்ற கொடுமையை இப்புதிய பிரிவின் மீது சுமத்தினான்.தமிழ்நாட்டில் மனுதர்மம்தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசு உருவான பின்னர், மனுதர்மத்தின் இறுக்கமான சாதியப் பாகுபாடுகள் நுழைந்துவிட்டன. பல்லவர் காலச் செப்பேடுகளில் இடம் பெற்றுள்ள வடமொழி ஸ்லோகங்கள், சலுகை பெற்ற பிரிவாகப் பிராமணர்கள் உருவாகிவிட்டதைச் சுட்டுகின்றன. சோழப் பேரரசிலும், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் இது மேலும் வளர்ச்சி பெற்றது.‘அறநெறி வளர, மனுநெறி திகழ’‘மறைநெறி வளர மனுநெறி திகழ’‘மனுநீதி முறை வளர’‘மனுநீதி தழைத் தோங்க’‘மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க’‘மனுவாறு பெருக’என்றெல்லாம் தமிழ் மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் இடம் பெறும் தொடர்கள் அவர்கள் எந்த அளவுக்கு, மனு ஸ்மிருதியைச் சார்ந்து நின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர், அறம், ஒழுக்கம் என்பன குறித்து வரையறை செய்ய முற்படும்போது ‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம். ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமச்சரியம் முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’ என்று குறிப்பிடுகிறார்.பாண்டியர் காலக் கல்வெட்டொன்று. (கி.பி.1263), பிராமணர்கள் ஐவர், அடாத செயல்கள் செய்தபோது, அவர்களை எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பதை,‘கீழ் சாதிகளைத்தண்டிக்கும் முறைமைகளிலே’ என்று குறிப்பிடுகிறது. சாதியின் அடிப்படையிலேயே நீதி வழங்கப்பட்டதை இதன் மூலம் அறியமுடிகிறது.எல்லாவற்றிற்கும் மேலாகக் கல்வி என்பது வேதக் கல்வியாகி, அதைப் பயிலவும் பயிற்றுவிக்கவும் மன்னர்கள் மானியம் வழங்கினர். இக்கல்வியைக் கற்பிக்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உரியது. சத்திரியரும், வைசியரும் கற்பதற்கு மட்டுமே உரிமையுடையவர். இதன் விளைவாக உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்த சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் பிரிவுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.‘இம்மைப் பயன்தரும் கல்வியைச் சூத்திரர்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடாது’ என்று மனு நெறியானது கல்வியறிவு பெறுவதிலிருந்து அடித்தள மக்களை விலக்கி வைத்தது.ஆயினும் சூத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்களும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பிரிவினரும், ‘செவி வாயாக நெஞ்சுகளனாகக்’ கொண்டு பாரம்பரிய தொழில் நுட்பத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டதுடன், வாய்மொழி வழக்காறுகளாக அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் சென்றனர். இதன் விளைவாகத்தான் தமிழ் உரைநடையானது வளர்ச்சியுறாத தேக்க நிலையை அடைந்தது. நினைவிலிருத்திக் கொள்ள எளிதாய் இருக்கும் என்பதால்தான் நமது சித்தவைத்திய நூல்களும், தச்சு வேலை, கப்பல் கட்டுதல் தொடர்பான நூல்களும் செய்யுள் வடிவில் அமைந்தன.ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட இம்மக்கள்தான் கவின்மிகு கோயில்களையும், வலுவான அணைகளையும், ஏரிகளையும் அன்றாடம் புழங்கும் பொருள்களையும், உணவு தானியங்களையும் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கினர். சமூகத்தின் நிதியுதவியுடன் கல்வி கற்ற மேட்டிமையோர் சமூக நலனுக்காக எதையும் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் அவர்கள் ‘மாமனிதர்களாக’ காட்சியளித்தனர்.மனுவின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் இடம்பெற்றிருக்காவிட்டால், எண்ணும் எழுத்தும் சார்ந்த ஏட்டுக்கல்வியும், தொழில் நுட்பம் சார்ந்த அனுபவ அறிவும் இணைந்து செயல்பட்டிருக்கும். உடல் உழைப்பை இழிவானதாகவும், ஏட்டுக்கல்வியை உயர்வானதாகவும் கருதும்போக்கு உருவாகியிருக்காது. இதனால் இம்மண் சார்ந்த அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து நமக்கான ஒரு நவீனக் கல்வி உருப்பெற்றிருக்கும்."கீற்றில் ஆ. சிவசுப்பிரமணியன்"
இந்துவாக சாக மாட்டேன்! - தந்தை பெரியார்
ஹெட்கேவர் என்ற தெருப்பொறுக்கி!
1889-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி, நாக்பூரில் பார்ப்பன அர்ச்சகர் ஒருவருக்குப் பிறந்த மூன்றாவது மகன்தான் ஹெட்கேவர்! தலைமுறை தலைமுறையாக அர்ச்சகர் தொழிலில் ஈடுபட்டு வந்தது இந்தக்குடும்பம் என்பதிலிருந்தே பார்ப்பன வர்ணாஸ்ரம வெறித் தனத்தின் சூழலில் அவர் வளர்க்கப்பட்டவர் என்ற உண்மை தெளிவாகவே விளங்கும்.
அதற்கு பல தலைமுறைகளுக்கும் முன்பே ஆந்திர மாநிலத்தில் 'குந்த்குர்த்தி' என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த ஐதராபாத் நிசாம் மன்னர்களின் ஆட்சியை எதிர்த்துப் போராட முடியாமல், வெறுப்படைந்து நாக்பூருக்கு வந்த குடும்பமாகும் அது!
எனவே, பார்ப்பன வர்ணாஸ்ரம வெறி, முஸ்லீம்களின் எதிர்ப்பு என்ற உணர்வுள்ள குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவர் ஹெட்கேவர்.
1902-ம் ஆண்டில், ஹெட்கேவரின் பெற்றோர்கள் இறந்த பிறகு, அவரது சகோதரர் மகாதேவ சாஸ்திரி செய்து வந்த தொழிலும் பார்ப்பன புரோகிதர் தொழில்தான்!
'மூஞ்சி' ஆர்.எஸ்.எஸ். தோற்றுவித்த ஐவர் குழுவில் ஒருவர். இந்து ராஷ்டிரத்தை வன்முறையின் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியான துடிப்பு கொண்டிருந்தவர் இந்த மூஞ்சி!
ஹெட்கேவருக்கு நல்ல உடல் வலிவு உண்டு; குத்துச் சண்டை, நீச்சல் பயிற்சிகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. தெருச் சண்டைகளில் அவர் வீரராகத் திகழ்ந்தார். எனவே, அக்கால அரசியலுக்கு இவர் சரியானவர் என்ற முடிவுக்கு வந்து, அவரை உற்சாகப் படுத்தினார் 'மூஞ்சி.'
ஆர்.எஸ்.எஸ். ஒரு வன்முறைக் கும்பலாகவும், பார்ப்பன வெறி அமைப்பாகவும், முஸ்லீம்கள் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் கல்லில் செதுக்கப்பட்ட உண்மைகளே என்பதற்கு ஹெட்கேவர் வளர்ந்த, உருவான சூழ்நிலைகளே சரியான சான்றுகளாகும்.
"இந்து ராஷ்டிரம் என்ற இந்தக் கொள்கையைச் சொன்ன அந்த முட்டாள் யார்?""அதைச் சொன்ன முட்டாள் இந்த கேஷவ்பல்ராம் ஹெட்கேவர்தான்."
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திலே, இளைஞன் ஒருவன் கேட்ட கேள்விக்கு ஹெட்கேவர் மேற்கண்ட பதிலை அளித்தார்!
அவரைப் பொறுத்தவரை தன்னுடைய 'ஆளுமை சக்தியால்' தொண்டர்களை கட்டாயப்படுத்தி தனது அமைப்புக்கு இழுத்தவரே தவிர நியாயப்பூர்வமான அறிவு வாதங்களை எடுத்து வைத்து விவாதித்து அதன் மூலம் தனது அமைப்புக்கு பலம் சேர்த்தவர் அல்ல!
இந்து ராஷ்டிரம் என்பது என்ன என்ற கேள்விக்கு, விவாத பூர்வமான விளக்கங்கள் எதையும் தராமல், தன்னையே முன்னிலைப்படுத்தி, நிலைமையை சமாளித்தார் ஹெட்கேவர்! (இந்த உரையாடலை, ஹெட்கேவரின் வாரிசு கோல்வாக்கர் எழுதிய 'ஸ்ரீ குருஜி சம்ஹாரதர்சன்' என்றஇந்தி நூலில் 5-வது அத்தியாயத்தில் 22-23 பக்கங்களில் குறிப்பிடுகிறார்.)
தொடர்ந்து கோல்வாக்கர் அதே நூலில் மேலும் எழுதுகிறார்...
"நான்தான் அந்த முட்டாள் என்ற ஒரு வார்த்தைக்கு மேல், அவர் பேசவில்லை. எந்த வாதத்தையும் வைக்கவில்லை. கேட்டவரை சமாதானப் படுத்திவிடும் நியாயங்களையும் சொல்லவில்லை. அதிலே மிகவும் ஆச்சரியம் என்னவென்றால், அவர் அந்த ஒரு வார்த்தையை சொன்னவுடனேயே, அங்கு கூடியிருந்த எல்லா உறுப்பினர்களும் சமாதானமடைந்து, தாங்கள் 'சுயம் சேவக்காக' உறுதி எடுக்க முன் வந்தனர்."
இப்படி குருபக்தியோடு, குருவின் கருத்துக்களில் சீடர்கள் கேள்வி கேட்பதே குற்றம் என்ற முறையோடுதான், ஹெட்கேவர் இந்த அமைப்பை நடத்திச் சென்றிருக்கிறார்! சிந்தனைகளுக்கு விளக்கங்களுக்கு அங்கே இடமில்லை! எனவேதான் 'நீங்கள் டாக்டர்ஜீயைப் பற்றி (ஹெட்கேவர்) தெரிந்து கொள்ள வேண்டுமா?ஆர்.எஸ்.எஸ். பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸ். பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? டாக்டர்ஜீ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்... என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
"மரியாதைக்குரிய டாக்டர்ஜீ அவர்களும், ஆர்.எஸ்.எஸ்சும் ஒன்றுக்கொன்று இணைந்தது. டாக்டர்ஜீ வாழ்க்கையைப் படித்தால் அதிலிருந்து கிடைக்கும் எழுச்சி உணர்வுகளால் ஆர்.எஸ்.எஸ்.சின் முறையான வளர்ச்சியை தெரிந்து கொள்ள முடியும்." என்கிறார் மறைந்த ஆர்.எஸ்.எஸ். முன்னால்தலைவர் தேவரஸ் (ஆதாரம்: சி.பி. பிஷிகார் எழுதிய நூல் பக்கம் - 5)
எனவே ஹெட்கேவர் வாழ்க்கை வரலாற்று விவகாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால், அது ஆர்.எஸ்.எஸ்.தன்மையை பிரதிபலிக்கும் என்பதால், நாமும் அந்த ஆராய்ச்சியில் சற்று ஆழமாக இறங்குவோம்!
மெட்ரிகுலேஷன் தேர்வை நாக்பூரில் முடித்துவிட்டு மருத்துவப் படிப்பு படிக்க (ஹெட்கேவர்) கல்கத்தா போகிறார். இந்து மத வெறியரான அதே 'மூஞ்சி' என்ற பார்ப்பனர்தான் அவருக்கு இப்போது உதவி புரிகிறார். வன்முறை இயக்கங்களில் மிகவும் ஆர்வம் கொண்ட ஹெட்கேவர், கல்கத்தாவில் போய் படித்தால் இத்தகைய அமைப்புகளோடு தொடர்பு கொள்ள முடியும் என்று விரும்பினார். மராட்டிய மன்னர் சிவாஜியும், திலகரும் இவரின் ஞானத் தந்தைகள்!
1910-ம் ஆண்டிலிருந்து 1915-ம் ஆண்டு வரை கல்கத்தாவில் மருத்துவக் கல்வி பயின்றபோது, இவர் தங்கிய விடுதிதான் மாணவர்களின் அரசியல் அரங்கங்களாக செயல்பட்டது. பல திவீரவாத இயக்கங்கள், புரட்சி இயக்கங்களைச் சார்ந்தவர்களும் அங்கே வருவதுண்டு.
இந்த கல்கத்தா வாழ்க்கைப் பற்றி, ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கிடும், ஆர்.எஸ்.எஸ்சின் அதிகாரபூர்வமான, சி.பி. பிஷிகார் என்பவரால் எழுதப்பட்ட நூல் பக்கம்-13 கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
"கல்கத்தா சென்றவுடன் ஹெட்கேவர் 'அனுசிஹிலன் சமிதி' என்ற அமைப்பின் நெருக்கமானஉறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆபத்துக்கள் நிறைந்த சில முக்கியமான வேலைகள்அவருக்குத் தரப்பட்டன. புரட்சியாளர்களுக்கு பயங்கரமான ஆயுதங்களை ரகசியமாக கொண்டு சென்றார்."என்று கல்கத்தா போன உடனேயே இவர் ஒரு புரட்சிக்காரராக மாறிவிட்டது போல, ஒரு தோற்றத்தைத்தந்து எழுதியிருக்கிறார்கள்.
ஆனால், உண்மை என்னவென்றால் வேறாக இருக்கிறது!
ஜே.ஏ. குர்ரான் (J.A.Cruuan) எழுதிய "Militant Hinduism in Indian Politics" நூலில்பக்கம்-13-ல் உண்மையை உடைத்துக் காட்டுகிறார்!
"கல்கத்தாவுக்கு ஹெட்கேவர் போனவுடன், புரட்சி இயக்கங்கள் அவருக்கு முக்கியத்துவம் எதுவும்தரவில்லை. கல்கத்தாவில் வாழ்ந்த காலத்தில், அவர் சிறைக்குச் சென்றதாக எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பிரிட்டிஷார் அவரை போலீஸ் காவலில் வைத்திருந்ததாக சொல்கிறார்கள். அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது." என்று ஹெட்கேவரின் 'புரட்சி' வாழ்க்கையின் புரட்டுகளை அம்பலப்படுத்திக் காட்டுகிறார்.
ஆபத்து தரக்கூடிய பல இரகசிய வேலைகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறுகிறார்களே தவிர, எந்த வேலையை செய்தார்? எங்கே தூது போனார்? எந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டு போனார்? என்பதற்கான விளக்கங்களை எதையுமே ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை!கல்கத்தாவில் சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டார் என்று அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கும் அவர்கள் கூச்சப்படவில்லை. 'ஹெட்கேவர்' வாழ்க்கை வரலாறும் - ஆர்.எஸ்.எஸ். வரலாறும் ஒன்றே என்கிறார்கள்; இந்த 'சத்திய கீர்த்திகள்.'
ஆனால், இந்த 'உத்தம' 'புத்திரர்'களின் கதைகள் பொய்மைகளின் மூட்டைகளாகவே இருக்கின்றன.
கல்கத்தாவில் மருத்துவ டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஹெட்கேவர் நாக்பூர் திரும்புகிறார்! அப்போது முதலாம் உலக மகாயுத்தம் துவங்கிவிட்டது. யுத்தத்தில் இங்கிலாந்தும் சம்பந்தப்படுகிறது!அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, உள்நாட்டிலே ஆயுதம் தாங்கிய புரட்சியை உருவாக்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.
முதலாம் உலக மகா யுத்தம் துவங்கியபோது, ஜெர்மன் மொழியைப் படிக்க ஆரம்பித்தவர்கள் இந்த நாட்டு பார்ப்பனர்கள்தான்! காரணம், ஜெர்மன்காரர்கள் கையில் இந்திய ஆட்சி வந்துவிடும் என்று நம்பி,அந்த ஆட்சியிலே தாங்கள் செல்வாக்குப் பெற்று விடலாம் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கிடந்தனர்!
ஜெர்மன் - பாசிச இயக்கத் தலைவர் ஹிட்லர் மீது ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடி அமைப்பையே, தங்கள் கொடியாக வைத்துக் கொண்டிருந்ததுதான் இந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டம்!"இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு ஹிட்லர்தான் குரு. காந்தியாருக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை இவர்கள் பரப்பி வந்தார்கள். சுதந்திரப் போராட்ட உணர்வுகள், மதச்சார்பின்மை ஆகியவற்றை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்தனர். ஜனநாயகத்தை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அது மேற்கத்திய நாடுகளின் இறக்குமதி என்றார்கள். அதே அளவுக்கு சோஷலிசத்தின் மீதும் அவர்களுக்கு வெறுப்பு உண்டு. காரணம், சோஷலிசம் இந்து கலாச்சாரத்துக்கு எதிரானது என்று அவர்கள் உணர்ந்தார்கள்.
காந்தியாரை ஒரு தலைவராகவே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.1965-ம் ஆண்டில்தான், மிகவும் சிரமத்தோடு வேறு வழியின்றி தங்களின் அன்றாடப் பிரார்த்தனையில் காந்தியார் பெயரையும் சேர்த்துக் கொண்டனர்."
நாம் மேலே எடுத்துக் காட்டியிருப்பது - மறைந்த சோஷலிஸ்ட் தலைவர் மதுலிமாயி அவர்கள் 'சண்டே'பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியைத்தான். (10.6.1979 சண்டே இதழ்) இந்தப் பின்னணியில் முதலாவது உலகப்போரை பயன்படுத்தி, உள்நாட்டில் ஆயுதப் புரட்சி நடத்திட, இவர் போட்ட திட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
ஹெட்கேவர் தனது திட்டம் பற்றி, இவரின் ஞானகுரு திலகரிடம் எடுத்துச் சொன்னபோது, அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று புறக்கணித்துத் தள்ளிவிட்டார்; இதற்கு எந்த முக்கியத்துவமும் திலகர் கொடுக்கவில்லை. திலகர் ஆதரவு இல்லை என்றவுடன், ஹெட்கேவரின் வீரமும் குறைந்தது.(இந்தக் கருத்துக்களை 'பிஷிகார்' தமது 'சங்நிர்மதா' நூல் பக்கம் 13-ல் விளக்குகிறார்.)
"நாக்பூருக்கு திரும்பிய ஹெட்கேவர், இந்து மகாசபையில் தான் சேர்ந்து விட்டதாகவும், அந்த அமைப்புக்குத் தேவையான நூல்கள், வெளியீடுகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அவரே தனது நண்பர்களிடம் கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோற்றத்துக்கான எண்ண ஓட்டங்கள் இந்தக்காலத்தில்தான் அவருக்கு உருவானது."
"அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியிலும் இந்து மகா சபையிலும் ஒரே நேரத்தில், வேலை செய்கிறார்! ராஷ்டிரிய உத்சவ மண்டல் என்ற அமைப்பிலும் தீவிரமாகப் பங்கெடுத்தார். 'அக்ஹதா' என்ற மாணவர் அமைப்பிலும், பொதுக் கூட்டங்கள் - மாநாடுகளிலும் பங்கெடுத்துக் கொண்டார்." என்ற தகவல்களை'பிஷிகார்' தமது நூலில் குறிப்பிடுகிறார்.
இவர் அப்போது தீவிரமாகப் பங்கெடுத்த 'ராஷ்டிரிய உத்சவ மண்டல்' என்ற அமைப்பு ஒரு வன்முறை அமைப்பாகும்.
இந்த வகுப்பு வெறிக் கும்பல் மகாராஷ்டிர மாநிலத்தில் பிவாண்டி என்ற இடத்தில் மிகப்பெரிய வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவிட்டு நடத்தியதற்காக, மேடன் விசாரணைக் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கும்பலாகும்!ஒரே நேரத்தில் இந்து மகாசபையிலும் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்து இரட்டை உறப்பினராக பணியாற்றும்முறை அப்போது இருந்திருக்கிறது! பின்னர் அது ஒரு பிரச்சனையாக வெடித்துக் கிளம்பியபோதுதான் 1934-ம் ஆண்டு அதில் இந்திய காங்கிரஸ் 'இரட்டை உறுப்பினர் முறையை' தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியது.
மூத்த தலைவர்கள் பலருடன் ஹெட்கேவர் தொடர்பு கொண்டிருந்தாலும் ஒருவர்கூட இவரின் ஆயுதம் தாங்கியப் போராட்ட திட்டத்திற்கு ஆதரவு தரத் தயாராக இல்லை என்று எழுதுகிறார் 'பிஷிகார்' தனது நூலில் (பக்-27)
கிராமத்தான் கேட்கும் கேள்வி!
அன்புடன்,
கிராமத்தான்....
நன்றி-விடாதுகருப்பு
வந்தேறிகள் கண்டுபிடித்த ஜாதிமுறைகள்!
1. போரில் புறங்காட்டி ஓடியவன்.2. போரில் கைது செய்யப்பட்டவன்.3. பிராமணனிடத்தில் ஊழியம் செய்பவன்.4. விபச்சாரி மகன்.5. விலைக்கு வாங்கப்பட்டவன்.6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்.7. தலைமுறை தலைமுறையாய் அடிமை ஊழியம் செய்பவன்.8. அடிமையின் மகன்.
-மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் 8; சுலோகம் 4
ஒரு சூத்திரன் மத போதனையைப் போதித்தாலோ அல்லது வேத வார்த்தைகளை முனுமுனுத்தாலோ அவனது நாக்கைத் துண்டித்திடவேண்டும். சூத்திரன் கல்வி அறிவு பெறாமல் தடுக்கப்பட்டான்.
--கெளதம தர்ம சூத்திரம்--
ஒரு சூத்திரன் வேதம் ஓதுதலை வேண்டுமென்றே காது கொடுத்துக் கேட்பானேயானால்,அவனது இரு காதுகளிலும் தகரத்தையோ அல்லது அரக்கையோ உருக்கி ஊற்றி நிரப்பவேண்டும். அவன் வேத பாடத்தை ஓதினால், அவனது நாக்கை அறுத்துவிட வேண்டும். அவன் வேத பாடங்களை நினைவு வைத்திருந்தால் அவன் உடலை இரு துண்டங்களாகப் பிளந்து விடவேண்டும்!
“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை அடி, உதை...” இப்படிச் சொல்கிறது அந்த வெங்காய மனு.
கஜினி முகம்மதுடன் வந்த ஆல் - பெரூனி என்ற பாரசீக அறிஞர், இந்தியாவைக் குறித்து தனிப்பட்ட முறையில் ஒரு ஆய்வு நூல் எழுதியுள்ளார். அவர் தான் கண்ணால் கண்டதையும், காதால் கேள்விப்பட்டது, படித்தறிந்தது ஆகிய அனைத்துச் செய்திகளையும், தாம் எழுதிய நூலில் மிகவும் தெளிவாக எழுதியுள்ளார். தன் சொந்தக் கருத்துக்களை அறவே ஒதுக்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
அதில் சமஸ்கிருதம், வேதம் கற்கவோ, போதிக்கவோ முயலும் சூத்திரர்களுக்கும், வைஸ்யர்களுக்கும் கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டது பற்றியும் விரிவாக சொல்லியுள்ளார். மேலைநாட்டு அறிஞனுக்குக்கூட தெரிகிறது இந்த பார்ப்பன பரதேசிகளின் களவானித்துவம் பற்றி!
சூத்திரன் நிலைபற்றி அதே மன்னுஸ்மிருதி கூறுவதை மேலும் கூறுவதை பாருங்கள்:
1. பிராமணன் கூலி கொடுத்தும் கூலி கொடுக்காமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். (மனு; அதி.8. விதி 43)
2. பிராமணனால் கூலி கொடுக்கப்படாவிட்டாலும் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டாலும் சூத்திரன் தான் வேலை செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து நீங்கியவனாக மாட்டான். (மனு அதி. 8. விதி 414)
3. சூத்திரன் பொருள்கள் எதுவாய் இருந்தாலும் அது பிராமணனுக்கே சொந்தமானதாகும். (மனு. அதி. 8. விதி 416)
4. சூத்திரனின் பொருள்கள் யாவற்றையும் பிராமணன் சிறிதும் தயக்கமின்றிப் பலாத்காரமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம். சூத்திரர்களுக்குத் தொண்டுதான் சொந்தமே ஒழிய பொருள்களுக்குக் கொஞ்சமும் அவன் உரிமைக்காரன் அல்ல (மனு அதி 8. விதி 417)
5. சூத்திரனைப் பிராமணனுக்கே தொண்டு செய்யும் படி அரசன் கட்டளையிட வேண்டும். (மனு. அதி 8 விதி 418)
அன்றைக்கு பறையர்கள் என்ற பட்டம் மாறி பிறகு ஆதித் திராவிடர்கள் என்றாகி பின் அரிசனங்கள் என்கின்ற பட்டம் வந்து பிறகு தலித் என்று வந்தது போல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழியக் குறையும் இழிவும் நீங்கிவிடாது. விபச்சாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும், தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்குச் சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை. அதே நிலையில்தான் பார்ப்பனன் இவர்களை இன்றைக்கும் வைத்துள்ளான். பாப்பானே மறந்தாலும் மற்ற ஆதிக்க மேல்ஜாதி நாய்களும் விடுவதாக இல்லை என்பதும் உண்மையே!
பாப்பார பரதேசி நாய்களின் கட்டுக்கதைகளை மேலும் படியுங்கள். பிரம்மன் முதல் நான்கு சாதியையும் தன் உடல் பாகத்தில் இருந்து படைத்தான். அதன் விபரமாவது:
1. வாயிலிருந்து பிராமணன்.2. தோளிலிருந்து க்ஷத்திரியன்3. தொடையிலிருந்து வைஷ்யன்4. காலிலிருந்து சூத்திரன்.
பிராம்மணன், க்ஷத்திரியன், வைஷ்யன் மூன்றையும் ஆரியர் என்றும் வேதங்கள் அழைக்கின்றன. இவர்கள் இருமுறை பிறந்தோர்(Twice-born) என்றும் வேதங்கள் அழைக்கின்றன. சூத்திரன் ஒரு முறை பிறந்தவன். ஏனைய மூவருக்கும் சேவை செய்யப் படைக்கப் பட்டவன்.
திருமணத்தின் போது, தன் சொந்த சாதியிலேயே மணம் முடிக்க வேதங்கள் பரிந்துரைக்கின்றன. மாறி முடித்தால் பிறக்கும் குழந்தைகள் புதிய சாதியாவார்கள். அவை என்னென்ன ஜாதிகள் என்று இனிப் பார்ப்போம்.
ஒரு படி குறைந்து மணம் முடித்தால் (உ-ம் பிராமணன்-க்ஷத்திரியன், க்ஷத்திரியன் - வைஷ்யன்) பிள்ளைகள் தந்தையின் சாதியில் சேர்க்கப்படுவார்கள். ஆனால் குறை கூறப்படுவார்கள்.
அதில்... (ஆண் + பெண் = பிள்ளை)
பிராமணன் + க்ஷத்திரியன் = குற்றமுள்ள பிராமணன்க்ஷத்திரியன் + வைஷ்யன் = குற்றமுள்ள க்ஷத்திரியன்வைஷ்யன் + சூத்திரன் = குற்றமுள்ள வைஷ்யன்.
இனி ஒரு படி தாண்டி மணமுடித்தால் பிறக்கும் பிள்ளைகள் "அபஷதர்கள்" என அழைக்கப்படுவர். அபஷதர்கள் பல சாதிகளாகும். இது தாய் தந்தையரின் சாதியைப் பொறுத்தது.
அவை...
அபஷதர்கள்
பிராமணன் + வைஷ்யன் = அம்பஷ்தன்
பிராமணன் + சூத்திரன் = நிஷதன்(பரசவன்) {இதன் பொருள்: பரயன்+சவம் = உயிருள்ள செத்தவன்}
க்ஷத்திரியன்+சூத்திரன் = உக்ரன் {பொருள்: கொடியவன், cruel, ferocious, The english word "Ogre" came from this} (தமிழ்ச்சொல்லான உக்கிரம் என்பதும் இதன் மருவுதலே)
க்ஷத்திரியன் + பிராமணன் = சுதன்வைஷ்யன் + க்ஷத்திரியன் = மகதன்வைஷ்யன் + பிராமணன் = வைதீகன்
சூத்திரன் + வைஷ்யன் = அயோகவன்சூத்திரன் + க்ஷத்திரியன் = க்ஷத்திரியன்சூத்திரன் + பிராமணன் = கந்தலன்.
இனி, இந்தப் புதிய சாதிகளுடன் மூலச்சாதி இணைந்தால், இன்னும் புதிய சாதிகள் உருவாகும். அவை.
பிராமணன் + உக்ரன் = அவிர்த்தன்பிராமணன் + அம்பஷ்தன் = அப்ஹீரன்பிராமணன் + அயோகவன் = திக்வனன்
நிஷதன் + சூத்திரன் = புக்கசன்சூத்திரன் + நிஷதன் = குக்குதகன்க்ஷத்திரியன் + உக்ரன் = ஸ்வாபகன் (இதுவே ஆகக் கழிந்த சாதியாம்!)
இன்னும் பல...
இனி, புதிய சாதிகள் இரண்டு இணைந்தால் அதி புதிய சாதிகள் உருவாகும்.
உதாரணமாக
வைதேகன் + அம்பஷ்தன் = வேணன்.
இதன் சேர்மானங்கள்(combinations) அதிகம் என்பதால் சாதிகளில் பெயர்களை மட்டும் பட்டியலிடுகிறோம்..
விராத்தியன்பிஹ்ரிக்க கந்தகன்அவந்யன்வடதானன்புஷ்பதன்சய்கன்
கஹால்பன்மல்லன்லிக்கிவினன்நதன்கரணன்கசன்திராவிடன்
சுத்ஹன்வன்அகர்யன்கருஷன்விக்மனன்மைத்ரன்சத்வதன்
இவையெல்லாம் போக பிராமணப் பெண்ணுடன் சூத்திரன் விபச்சாரம் செய்ததால் பிறப்பவர்கள் சண்டாளர்களாம்! இதுபற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்.
..............
இப்படிப் போகிறது அந்த பார்ப்பன பரதேசிகள் எழுதி வைத்த கட்டுக்கதைகள்! பார்ப்பனன் மேலே பிரித்து வைத்த சாதிகளில் இருந்து நாம் சிலவற்றை புரிந்து கொள்ள முடிகின்றது.
1. அவை அனைத்தும், முறைப்படி திருமணம் முடித்தவர்களின்பிள்ளைகளின் சாதிகள்தான்.
2. முறைதவறிப் (adultary) பிறந்தால் வேறு சாதி.
3. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழில் பரிந்துரைக்கப் படுகிறது.
4. இப்பெயர்கள் அனைத்தும் சமஷ்கிருதப் பெயர்களே. (வெள்ளாளன்,முத்திரையன், முக்குவன் போன்ற) தமிழ்ச் சாதிப் பெயர்கள் இவைகளில்தான் இருக்க வேண்டும்.
இப்படி மக்களைக் கூறுபோடும் வெங்காய புரட்டு வேதங்களை நம்பி இன்று வரைக்கும் சாதிகளைக் கட்டிக்கொண்டு அழிந்து போகின்றான் தமிழன்..
"பிராமணன், இறைவனின் தலையிலிருந்து வருகிறான். சூத்திரன் காலிலிருந்து வருகிறான். இவை சக்தி பீடங்களான கற்றளிகளை சுட்டுகிறது என்று நம்புகிறேன்" என்று ஒரு வெறிபிடித்த பார்ப்பனர் தமிழ் இணையத்தில் எழுதியதை படித்தேன். உடனே நண்பரைத் தொடர்பு கொண்டு, "என்னய்யா இந்தாளு இப்படி எழுதி இருக்கானே?" என்றேன்.
அதற்கு அவர் சொன்னார், "ஏன்யா, அவன் அங்கேருந்து பொறந்தான், இவன் இங்கேருந்து பொறந்தான்னு சொல்றானுங்களே? அப்போ எவனுமே யோனியிலிருந்து பொறக்கலையா? இதென்ன கொடுமை?" என்று சொல்லிவிட்டு அவரே தொடர்ந்தார்.
"சரி பொறக்குறதுதான் வேற வேற இடம்? ராத்திரி வேலை எங்கே பாக்கிறானுங்க?"
"எல்லா பயலும் கால் செண்டர்ல தான்!"
Sunday, March 9, 2008
மார்ச் 08 சர்வதேச மகளிர் தினம்!
சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனை குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!
கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள்,இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.
புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.
ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!
அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.
இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.
இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!
தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.
இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ம் நாளாகும்! அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.
1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால் தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது.
அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய பெண்கள் ஜேர்மனியில் பெண்கள் வாக்குரிமை கேட்டு மில்லியன் துண்டுப் பிரசுரங்களை நாடெங்கும் விநியோகித்தனர்.
ஜெர்மனியில் மகளிர் தொடங்கி வைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் மகளிர் தங்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். போராடினால் தான் உரிமைகளைப் பெற முடியும் என்று எண்ணத் தலைப்பட்டு போராடத் தொடங்கினர்!
அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் பல விதங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் தங்களின் சவால்களை முன்வைத்துப் போராடி வருகின்றனர்!
வாழ்த்துகள் பெண்களே!
நிர்வாண ஓவியங்களும் இந்து தேசியமும்!
அசுரன்
நன்றி அரசுபால்ராஜ்
தினமணியின் பூணூலில் பொங்கி வழியும் RSS கொழுப்பு!!!
ஏதோ இந்துக்கள் எல்லாருக்கும் நான் தான் ஹோல்சேல் பாதுகாப்பு குத்தகை எடுத்துள்ளேன் என்பது போல கதறும் இந்த வெறியர்கள் நேற்று அதாவது 6 மார்ச் 2008 ல் சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடியததற்க்Ì தீட்டு கழித்து தீட்சிதர்கள் நடத்திய பரிகார பூசையை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள்?
தீட்சிதர்களின் வரலாறும் ஆக ஆயோக்கியத்தனமானதுதான். இந்து மக்கள் கட்சி என்ற பெயரில் பெரும்பான்மை இந்துக்களை அவமானப்படுத்தி எழுதியுள்ள இந்த தினமணி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவர தமிழ் ஓலைகள் ராஜ ராஜ சோழனால் பூட்டியிருந்த அறையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட சம்பவமே கூட தீட்சிதர்கள் தமிழை எந்தளவுக்கு அவமானப்படுத்தியுள்ளனர் என்பதற்க்கு ஒரு சான்றாகும். லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழ் பாடல்களை ஒரு அறையில் பூட்டி நாசம் செய்ததுடன் இல்லாமல். ராஜ ராஜ சோழன் வந்து அந்த அறையை திறக்க சொன்ன போது திறக்க மாட்டேன் என்று அடாவடித்தனமும் செய்தனர் (இன்று தமிழில் பாடுவதற்க்கு செய்வது போலவே). இதில் பாதிக்கும் மேற்ப்பட்ட தேவரப் பாடல்கள் தீட்சிதர்களின் அயோக்கியத்தனத்தால் அழிந்து போய் மீதியுள்ளவைதான் கிடைத்தன. வரலாறு இப்படியிருக்க அர்ஜூன் சம்பத அல்லது அவன் பெயரில் எழுதிய அல்லக்கை வரலாற்றை திரித்து எழுதுகிறது. அன்றாட சம்பவங்களையே திரித்து எழுதுபவர்களுக்கு வரலாற்றை திரிப்பது பெரிய விசயமில்லைதான்.
இது அன்று வரலாறு என்றால் இன்று கடந்த சில வருடங்கÇ¢ல் மட்டும் சிதம்பரம் கோயிலில் வளாகத்திலேயே சில கொலைகளும், பாலியல் வன்புணர்வு குற்றம் ஒன்றும் நடந்துள்ளது. இவற்றில் எல்லாம் தீட்சிதர்கள்தான் சம்பந்தப்பட்டுள்ளனர். இப்படி சிதம்பரம் கோயிலின் புனிதத்தை தமது சொந்த அரிப்புக்காக கெடுத்து வருபவர்கள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஆதரிக்கிறது இந்த RSS கும்பல்.
சாளுக்கிய மன்னனுக்கும், சோழப்பேரரசின் இளவரசிக்கும் பிறந்த குலோத்துங்க சோழனுக்கு முடியுரிமை வழங்குவதா கூடாதா என்ற சர்ச்சை எழுந்தபோது, தில்லை தீட்சிதர்கள் சாளுக்கிய வாரிசினை ஆதரித்துப் பட்டம் சூட்டத் துணை நின்றதாகவும், அதன்பேரில் தீட்சிதர்கள் குலோத்துங்கனிடமிருந்து பல உரிமைகளையும் தில்லைக் கோவில் சொத்துக்களையும் பெற்றதாகவும் வரலாறு சொல்கிறது. அதில் இருந்து தீட்சிதர்கள் சாளுக்கிய வம்சத்தில் இருந்து சோழனாக மாறிக்கொண்ட குலோத்துங்கன் காலத்தில் செப்பேடுகளில் மட்டும் தேவாரம் இருக்கட்டும். தினமும் பாடத்தான் வேண்டுமா? என்று தந்திரமாக தமிழை நடராசனிடம் இருந்து அகற்றி விட்டனர். இந்த சதியினை நக்கீரன் பத்திரிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆனால் தினமணியோ வரலாற்றையே புரட்டிப்போடுகிறது.
பார்ப்பன பயங்கரவாத அமைப்பான RSS என்றைக்கும் பெரும்பான்மை மக்களின் இறை நம்பிக்கைய மதித்ததே கிடையாது. நாட்டார் வழிபாட்டு தெய்வங்களையும் மாமிசம் உண்ணும் கடவுளர்களையும், சிறு தெய்வங்களையும் அவமரியாதையாக கருதி அவற்றை புணீதப்படுத்தி பார்ப்பனமயமாக்குவதுடன் இது போல ஏற்கனவே பார்ப்ப்னியமயமாக்க்கப்பட்ட கோயிலகளில் சதாரண மக்களை அவமரியாதை செய்வதையும் எதிர்த்து குரல் கொடுத்ததில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள் கருவறைக்குள் நுழைவதாகட்டும், தேர் இழுப்பதில் உரிமை கேட்பதாகட்டும் இவர்கள் ஆதிக்க சாதியினர் பக்கமிருந்தே குரல் கொடுப்பர். அது போலவேதான் இப்பொழுதும் கூட பார்ப்பனியத்தின் பக்கமிருந்து குரல் கொடுக்¸¢றார்கள்.
10.5.2005 அன்று ராமகோபாலன் தனது தொண்டர்களோடு இஸ்லாமியர் வாழும்பகுதியான கோட்டைமேட்டை ஒட்டிய உக்கடம், மதுரைவீரன் கோவிலுக்கு வருகிறார்.1008 கோயில்களுக்கு செல்லும் பயணத்தில். இந்த 10 ஆண்டுகளில் தொய்ந்துபோயுள்ள சங்பரிவாரத்தாருக்கு புத்துணர்ச்சியூட்ட இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.
அப்பகுதி இளைஞர்கள் அவரைத்தடுக்கிறார்கள். கோயிலில் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். ஒரு இந்துவான தனக்கு இந்துக்கோயிலில் நுழைய உரிமையுண்டு என்கிறார் ராமகோபாலன்.
'அதே உரிமை எங்களுக்கும் உண்டல்லவா?' 'இங்கிருந்து 10 கி.மீ.தொலைவிலுள்ள காளப்பட்டியில் மாரியம்மன் கோயிலில் நுழைய முயன்றதற்காக அருந்ததியர் காலனி தீவைத்துக் கொளுத்தப்பட்டது தெரியுமா?' என்று கூறி இந்துக்களாகிய நாங்கள் அந்த கோயிலில் நுழைவது குறித்து பேசிவிட்டு இந்த கோயிலில் நுழைந்து கொள் என்று தடுத்துள்ளனர் இளைஞர்கள்.
இந்துக்களிடையேயான பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ராமகோபாலன். 'அப்படியானால் முதலில் காளப்பட்டி போவோம். மாரியம்மனை ஒன்றாக தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரைவீரன் கோயிலுக்கு வருவோம்' என்கின்றார்கள் இளைஞர்கள். ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியான தர்மத்திற்கு விரோதமான நிபந்தனை என்று மறுத்துவிட்டுத் திரும்புகிறது காவிப்படை.
ஒருவாரம் கழித்து 24-05-2005 அன்று கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள பண்டத்தரசியம்மன் கோவிலுக்கு தகுந்த தயாரிப்புகளோடு வருகிறார் ராமகோபாலன்.
இந்த முறை கோட்டைமேட்டை விட மிகச் சிறந்த வரவேற்பு அவருக்கு. கோவில் இருக்கும் தெருவில் நுழையவே அவர் அனுமதிக்கப்படவில்லை. அதே நிபந்தனை. ஆவாரம்பாளையமே திரண்டுவந்து அவரைத் தடுக்கிறது. தங்கள் இலக்குகளை சரியாக அடையாளம் கண்டுகொண்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். (நன்றி: புதுவிசை)
இன்று இத்தனை வக்கனையாக பேசும் இந்த பொய்யர்கள் ஏன் ஆறுமுகசாமி முதன் முதலில் தமிழில் பாடச் சென்ற பொழுது தாக்கப்பட்டது குறித்து பேச மறுக்கிறார்கள்? கள்ள மௌனம் சாதிக்¸¢றார்கள்?
அப்பொழுது அவருடன் எந்த கம்யூனிஸ்ட் இருந்தான், எந்த மக இகக்காரன் இருந்தான்?
கோவை கலவரத்தில் ரவுடித்தனம் செய்த அர்ஜூன் சம்பத்தை நாளை அவனது மக்கள் விரோத செயல்களுக்காக மக்கள் அவனுக்கு நடு வீதிகளில் தண்டனை கொடுக்கும் போது அவன் அம்மா என்றுதான் கத்தப் போகிறான். மாதாஜி என்றல்ல என்பதை அவன் நியாபகம் வைத்துக் கொள்ளட்டும்.
இத்தனை வக்கனையாக பேசும் RSS மக்கள் விரோத கும்பல் நீதிபதியிடம் ஆறூமுகச்சாமியை விடமுடியாது என்பதற்க்கு மறுப்பாக தீட்சிதருக்கும், சம்ஸ்கிருதத்திற்க்கும் பாரம்பரிய உரிமைகள் இருப்பதாகவும், பிறரை அந்த மண்டபம் வரை அனுமதிப்பது நகைகளுக்கு ஆபத்து என்றும் கூறி வாதாடியதை எதிர்த்து எதேனும் செய்வார்களா?
அதாவது தீட்சிதர் தவிர்த்து, சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்க்கும் கோயிலில் உரிமையில்லை என்பதுதான் அவர்களின் வாதமெனில் இந்துக்களின் நலனுக்கு போராடும் RSS கும்பல் இன்னேரம் தீட்சிதர்களின் மண்டையில் தட்டி வழிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டுமல்லவா?
அதாவது தீட்சிதர் தவிர்த்தும், சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்க்கும் உரிமையில்லை என்பது சாதிவெறியில்லையா? மொழி வெறியில்லையா?
தீட்சிதர் தவிர்த்து மற்றயவர்களை கோயிலில் விட்டால் திருட்டு போய்விடும் என்று சூத்திரன் அத்தனை பேரும் திருடன் என்று சொல்வது RSS வெறியர்களுக்கு தேனாக இனிக்கிறது போலும்.
இவையெல்லாம் சாதி வெறி, மொழி வெறி பிடித்து பெரும்பான்மை மக்களை அவமதிப்பவர்கள் RSS உள்ளிட்ட பார்ப்பன வெறீ கும்பலா அல்லது வேறு யாருமா என்பதை தெளிவாக காட்டுகின்றன.
இவற்றையெல்லாம் பிரசூரிப்பதற்க்கு திணமணியின் கழுத்தில் பாயந்து வயிற்றில் ஊடும் பூனூல் அனுமதிக்காது.
இப்படியெல்லாம் பேசினால் உடனே இஸ்லாமில் வேற்று மொழியில் இருக்கிறதே என்று ஒரு வாதம் வைக்கிறார்கள் இவர்கள். மசூதிகளில் அராபியில் ஓதுகிறார்கள்தான். அங்கு தாய்மொழிக்காகக் குரல் எழும்பி, அதற்கு இமாம்கள் தடைபோட்டால் அதற்கும் குரல்கொடுப்போம். ஆனால் கிறித்தவமோ, இசுலாமோ தமிழ் மொழியை நீச பாசை என்றோ, தமிழ்மக்களை-சூத்திரர்களை 'வேசிமக்கள்'என்றோ சொல்வது இல்லை அதுவும் நீதிமன்றம் முதல் இதோ தினமணியில் அறிக்கை வடிவில் வரை தமிழை அவமானப்படுத்திவிட்டு தைரியமாக வலம் வருவதில்லை அவர்கள் என்பதும் உண்மை.
பிறமதத்துக் காரர்களிடம் தமிழில் வழிபாடு நடத்து என்று வலியுறுத்துவார்களா என்று வக்கனையாக கேட்க்கும் இவர்கள் இங்கு கிறித்துவ வழிபட்டு இடங்களில் தமிழில்தான் வழிபாடு நடக்கிறது. மேலும் பைபிளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து அதனை வாசிக்கக் கல்வியை அவர்கள் தந்ததால்தான் கல்வியும் கிறித்தவமும் ஒடுக்கப்பட்டமக்களிடையே பரவிற்று. முதலில் இந்துமத வேதங்களையும், உபநிசத்துக்களையும், அப்படியே சங்கரர் எழுதிய சரோஜாதேவி புத்தகத்தையும், சவுந்தர்ய லகரியையும் மொழிபெயர்த்துவிட்டு இதைப் பத்திப் பேசலாம்.
இதே முற்போக்கு புரட்சிகர அமைப்பினர்தான் இஸ்லாமிய பிற்போக்கு தனங்களுக்கு, பெண்ணடிமைத்தனங்களையும், தஸ்லீமா நஸ்ரீனுக்கு ஆதரவாகவும் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அமைதியாக அயோக்கியத்தனம் செய்யும் போதெல்லாம் ஏதோ பார்ப்ப்னிய மதத்தில் ஆக சிறப்பாக பல்வெறு விசயங்கள் இருக்கிறது என்று பூ சுற்றுவதும். அவர்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தினால் உடனே இஸ்லாமில் இல்லையா, கிருத்துவத்தில் இல்லையா என்றோ அல்லது பாகிஸ்தானில் இல்லாததா, பங்களாதேசில் இல்லாதாதா என்றும் வேறு மாதிரி பேசுவதும் என்பதாக இரட்டை நாக்கு கொண்டவர்கள் இவர்கள். ஏதோ நாம் இஸ்லாம், கிருத்துவம், பாகிஸ்தான், பங்களாதேஸ் எல்லாம் மிக முற்போக்கானவை என்று சொன்னது போல.
இன்று நாத்திகனுக்கு அங்கென்ன வேலை என்று கேட்க்கும் கோயம்புத்தூர் கொலைகாரன் அர்ஜூன் சம்பத என்ற மனிதகுல விரோதி, ஆத்திகரான ஆறுமுகசாமி தனது உயிருக்கு நாத்திகர்களான மக இகவினர் துணையின்றி தீட்சிதர்களால் ஆபத்து என்று கோர்ட்டில் ஒப்படைத்து சிறை புகுந்த போது அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முன் வந்திருக்கலாமே? தஸ்லீம நஸ்ரீனுக்கு ஆதரவளிக்க முன் வந்த வாய்களுக்கு ஏன் ஆத்திகரான ஆறுமுகச்சாமிக்கு ஆதரவளிக்க முடியவில்லை?
அதாவது சர்ச்சையின் நோக்கம் ஆன்மிகமாக இல்லாததுதான் இவர்களுக்கு கவலையளிக்கிறதாம். உண்மையில் இவர்களுக்கு கவலையளிப்பது இவர்களின் பார்ப்ப்னிய ஆன்மிக ஆதிகத்திற்க்கு ஆபத்து உருவாகியுள்ளது என்பதே ஆகும். ஆத்திகரான ஆறூமுகச்சாமிக்கெதிராக தமிழுக்கெதிராக வரலாறு நெடுகிலும் தீட்சிதர்கள் சதி செய்த பொழுதெல்லாம் கண்டிக்க வக்கில்லாத முதுகெலும்பற்ற அடிமை கும்பல் தலைவான அர்ஜூன் சம்பத் இன்று தமிழர்களின் உரிமைக்கு போராடும் போது ரொம்ப நல்லவன் போல சதி செய்கிறார்கள் என்று முதலை கண்ணீர் வடிப்பதின் பின்னால் உள்ள சதியை நாம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
என்றைக்கு பெரும்பான்மை மக்களின் பண்பாட்டை அவமதிப்பது என்றும், பெரும்பான்மை மக்களின் உரிமைகளை அவமதித்து மறுப்பதும் என்றும், பிற்போக்குத்தனத்தால் மக்களை முட்டாள் ஆக்குவது என்றும் ஆகிவிட்டதோ அன்றே அங்கு ஆத்திகம் நாத்திகம் என்பதெல்லாம் இல்லை மாறாக மக்களின் உரிமை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது. அதனால் அதற்க்கான போராட்டத்தின் நியாயத்தைத்தான் நேர்மையானவன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறவன் பேச வேண்டுமேயொழிய அதை விடுத்து அப்பொழுது வந்து ஆத்திகம் நாத்திகம் என்று பேசினால் உண்மையில் அவன் ஏதோ சூழ்ச்சி செய்கிறான் என்றுதான் அர்த்தம். அர்ஜூன் சம்பத்தும் சரி அவருக்கு இந்த கட்டுரையை எழுதி கொடுத்த கும்பலும் சரி சூழ்ச்சிகள் செய்வதில் விற்பன்னர்கள் என்பது சமீபத்தில் தென்காசி இந்து முன்னணியினர் குண்டு வைத்து கைதான சம்பவத்திலும், கோவையில் குண்டு இருப்பதாக புரளி கிளப்பி அப்பாவிகளை மாட்டி விட்ட வழக்கிலும் சரி தெளிவாகவே அம்பலமாகியுள்ளது.
ஆறுமுகசாமி சிவபக்தர்தான். அவரின் பக்தியை இந்துமக்கள் கட்சியும் தீட்சிதர்களும் மதிக்கிறார்கள். அவர்களே அவரின் பக்தியை மெச்சி, நாத்திகம் பேசுறவாளிடம் இருந்து தனியாகித் தன்னந்தனியனாகி ஆறுமுகசாமி வந்தால் அவரை அரவணைப்போம் என்கிறார்கள். இதை நாம் நம்புவதற்கு நாம் ஒன்றும் நந்தனார் மாதிரி அப்பாவிகள் இல்லை. ஏனெனில் நேற்று போலிஸ் பாதுகாப்புடனும், மனித உரிமை கழகம், மக இக உள்ளிட்ட தோழமை அமைப்பினரின் பாதுகாப்புடன் சென்ற பொழுதே தீட்சிதர்கள் போலிசையும் தாக்கி போராடியவர்களையும் தாக்கினர் எனும் போது தனியாக வந்தால் இவர்களின் அரவணைப்பு எப்படியிருக்கும் என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை. இவர்கள் அரவணைப்பையும், பின்னர் சோதியில் கலக்கவைக்கும் பித்தலாட்டத்தையும். தில்லைக்கோவிலின் தென்வாயிலே சொல்கிறது. அன்று நந்தன்காலத்தில் ம.க.இ.க. தோழர்கள் இல்லை. நீதிமன்றம் (அநீதியே சொன்னாலும் அதன் பெயரிலாவது) இல்லை. இருந்திருந்தால். நந்தன் கதையை இன்று இருப்பது போல படித்திருக்க நியாயமில்லை.
பார்ப்ப்னியம் அதுவும் குறிப்பாக சிதம்பரம் தீட்சிதர்கள் வேற்று சாதியினரையும், மாற்று கருத்துள்ளவர்களையும் அரவணைக்கும் வரலாறு நந்தன், வள்ளலார் முதல் இன்று ஆறுமுகச்சாமி வரை நன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை நாத்திகர்களான மக இக, மனித உரிமை கழகம் போன்ற அமைப்புகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்திருந்தால் ஆத்திகர்களான நந்தனையும், வள்ளலாரையும் இன்னும் சில பல பார்ப்ப்னிய எதிர்ப்பு தியாகிகளின் உயிரையும் பாதுகாத்திருக்கலாம்.
இந்தியாவெங்கும் பொய்யையும் புணை சுருட்டையும் ஆயுதமாக கொண்டு வரலாற்று அவமரியாதை துடைக்க கட்டிடங்களை இடித்து தள்ள புறப்பட்ட வாணர கும்பலின் தலைமை கொலைகார தறுதலையான அர்ஜூன் சம்பத். சிதம்பரத்தின் தெற்கு வாயில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களின் அவமரியாதைச் சின்னமாக நிற்கிறதே. இந்து மக்கள் முன்னணி அந்த சுவரை இடிக்க கரசேவை ஆரம்பித்துவிட்டு நியாயவான் போல பேசட்டும்.
இந்த மக்கள் எழுச்சி 19ஆம் நூற்றாண்டில் இருந்திருந்தால், பார்ப்பனியத்தையும், கண்மூடிப்பழக்கங்களையும் மண்மூடிப்போகச் சொன்ன வள்ளலாரையும், பார்ப்பனீயத்தை எதிர்த்துக் கொலையுண்டு வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்ட பல ஆன்மீகவாதிகளையும் படுகொலையில் இருந்து காப்பாற்றி இருகக் முடியும். வள்ளலாரை ஜோதியில் எரித்த அதே வெறி. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னமும் சிவனடியார் ஆறுமுக சாமியை நோக்கிப் பாய்ந்தபோது. நக்சல்பாரிகள்தான் தமிழைக் காப்பாற்றினர். பார்ப்பனியத்தின் கொலைவெறிச் சதியை முறியடித்தனர். ஏனென்றால், எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ,எங்கெல்லாம் உரிமைகள் நசுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் வசந்தத்தின் இடி முழக்கமாய் மக்களுக்கு வெற்றியை கொடுக்க களமிறங்கும் நக்சல்பாரி. அதுதான் சிதம்பரம் தமிழ் வழிபாடு விசயத்திலும் நடந்துள்ளது.
இன்று தமிழ், ஆத்திகம் என்று பேசும் இன்று பார்ப்பன அடியாளும், அவனது கட்டுரையை பிரசூரித்த பார்ப்பன பத்திரிகையும் இது வரை தமிழர் என்ற சொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பிரச்சினைக்கும் சரி, இந்துக்கள் எனப்படுபவர்கள் இந்து என்ற பெயரிலேயே அவமாரியதை செய்யப்படும் பிரச்சினையிலு சரி குரல் கொடுத்ததேயில்லை. அங்கெல்லாம் நாம்தான் கொடுத்துள்ளோம். அதே போலத்தான் ஆறுமுகச்சாமி விசயத்திலும்.
சுயமரியாதையுள்ள ஓவ்வொருத்தனும் அர்ஜூன் சம்பத் போன்ற ரவுடிகளின் திமிர்பிடித்த பேச்சுக்களை பிரசூரிக்கும் பார்ப்பன கொழுப்பெடுத்த தினமணியை கடுமையாக கண்டிக்க வேண்டியுள்ளது.
இதனை அனைத்து நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.
அசுரன்