Monday, March 10, 2008

ஹெட்கேவர் என்ற தெருப்பொறுக்கி!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முதல் தலைவர், 'சர்சங்சாலக்' என்றுஏற்றிப் போற்றப்படும் அந்த 'கேஷவ பல்ராம் ஹெட்கேவர்' யார் என்ற விபரங்களை இங்கே ஆராய்வோம்.
1889-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி, நாக்பூரில் பார்ப்பன அர்ச்சகர் ஒருவருக்குப் பிறந்த மூன்றாவது மகன்தான் ஹெட்கேவர்! தலைமுறை தலைமுறையாக அர்ச்சகர் தொழிலில் ஈடுபட்டு வந்தது இந்தக்குடும்பம் என்பதிலிருந்தே பார்ப்பன வர்ணாஸ்ரம வெறித் தனத்தின் சூழலில் அவர் வளர்க்கப்பட்டவர் என்ற உண்மை தெளிவாகவே விளங்கும்.
அதற்கு பல தலைமுறைகளுக்கும் முன்பே ஆந்திர மாநிலத்தில் 'குந்த்குர்த்தி' என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த ஐதராபாத் நிசாம் மன்னர்களின் ஆட்சியை எதிர்த்துப் போராட முடியாமல், வெறுப்படைந்து நாக்பூருக்கு வந்த குடும்பமாகும் அது!
எனவே, பார்ப்பன வர்ணாஸ்ரம வெறி, முஸ்லீம்களின் எதிர்ப்பு என்ற உணர்வுள்ள குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவர் ஹெட்கேவர்.
1902-ம் ஆண்டில், ஹெட்கேவரின் பெற்றோர்கள் இறந்த பிறகு, அவரது சகோதரர் மகாதேவ சாஸ்திரி செய்து வந்த தொழிலும் பார்ப்பன புரோகிதர் தொழில்தான்!
'மூஞ்சி' ஆர்.எஸ்.எஸ். தோற்றுவித்த ஐவர் குழுவில் ஒருவர். இந்து ராஷ்டிரத்தை வன்முறையின் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியான துடிப்பு கொண்டிருந்தவர் இந்த மூஞ்சி!
ஹெட்கேவருக்கு நல்ல உடல் வலிவு உண்டு; குத்துச் சண்டை, நீச்சல் பயிற்சிகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. தெருச் சண்டைகளில் அவர் வீரராகத் திகழ்ந்தார். எனவே, அக்கால அரசியலுக்கு இவர் சரியானவர் என்ற முடிவுக்கு வந்து, அவரை உற்சாகப் படுத்தினார் 'மூஞ்சி.'
ஆர்.எஸ்.எஸ். ஒரு வன்முறைக் கும்பலாகவும், பார்ப்பன வெறி அமைப்பாகவும், முஸ்லீம்கள் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் கல்லில் செதுக்கப்பட்ட உண்மைகளே என்பதற்கு ஹெட்கேவர் வளர்ந்த, உருவான சூழ்நிலைகளே சரியான சான்றுகளாகும்.
"இந்து ராஷ்டிரம் என்ற இந்தக் கொள்கையைச் சொன்ன அந்த முட்டாள் யார்?""அதைச் சொன்ன முட்டாள் இந்த கேஷவ்பல்ராம் ஹெட்கேவர்தான்."
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திலே, இளைஞன் ஒருவன் கேட்ட கேள்விக்கு ஹெட்கேவர் மேற்கண்ட பதிலை அளித்தார்!
அவரைப் பொறுத்தவரை தன்னுடைய 'ஆளுமை சக்தியால்' தொண்டர்களை கட்டாயப்படுத்தி தனது அமைப்புக்கு இழுத்தவரே தவிர நியாயப்பூர்வமான அறிவு வாதங்களை எடுத்து வைத்து விவாதித்து அதன் மூலம் தனது அமைப்புக்கு பலம் சேர்த்தவர் அல்ல!
இந்து ராஷ்டிரம் என்பது என்ன என்ற கேள்விக்கு, விவாத பூர்வமான விளக்கங்கள் எதையும் தராமல், தன்னையே முன்னிலைப்படுத்தி, நிலைமையை சமாளித்தார் ஹெட்கேவர்! (இந்த உரையாடலை, ஹெட்கேவரின் வாரிசு கோல்வாக்கர் எழுதிய 'ஸ்ரீ குருஜி சம்ஹாரதர்சன்' என்றஇந்தி நூலில் 5-வது அத்தியாயத்தில் 22-23 பக்கங்களில் குறிப்பிடுகிறார்.)
தொடர்ந்து கோல்வாக்கர் அதே நூலில் மேலும் எழுதுகிறார்...
"நான்தான் அந்த முட்டாள் என்ற ஒரு வார்த்தைக்கு மேல், அவர் பேசவில்லை. எந்த வாதத்தையும் வைக்கவில்லை. கேட்டவரை சமாதானப் படுத்திவிடும் நியாயங்களையும் சொல்லவில்லை. அதிலே மிகவும் ஆச்சரியம் என்னவென்றால், அவர் அந்த ஒரு வார்த்தையை சொன்னவுடனேயே, அங்கு கூடியிருந்த எல்லா உறுப்பினர்களும் சமாதானமடைந்து, தாங்கள் 'சுயம் சேவக்காக' உறுதி எடுக்க முன் வந்தனர்."
இப்படி குருபக்தியோடு, குருவின் கருத்துக்களில் சீடர்கள் கேள்வி கேட்பதே குற்றம் என்ற முறையோடுதான், ஹெட்கேவர் இந்த அமைப்பை நடத்திச் சென்றிருக்கிறார்! சிந்தனைகளுக்கு விளக்கங்களுக்கு அங்கே இடமில்லை! எனவேதான் 'நீங்கள் டாக்டர்ஜீயைப் பற்றி (ஹெட்கேவர்) தெரிந்து கொள்ள வேண்டுமா?ஆர்.எஸ்.எஸ். பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸ். பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? டாக்டர்ஜீ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்... என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
"மரியாதைக்குரிய டாக்டர்ஜீ அவர்களும், ஆர்.எஸ்.எஸ்சும் ஒன்றுக்கொன்று இணைந்தது. டாக்டர்ஜீ வாழ்க்கையைப் படித்தால் அதிலிருந்து கிடைக்கும் எழுச்சி உணர்வுகளால் ஆர்.எஸ்.எஸ்.சின் முறையான வளர்ச்சியை தெரிந்து கொள்ள முடியும்." என்கிறார் மறைந்த ஆர்.எஸ்.எஸ். முன்னால்தலைவர் தேவரஸ் (ஆதாரம்: சி.பி. பிஷிகார் எழுதிய நூல் பக்கம் - 5)
எனவே ஹெட்கேவர் வாழ்க்கை வரலாற்று விவகாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால், அது ஆர்.எஸ்.எஸ்.தன்மையை பிரதிபலிக்கும் என்பதால், நாமும் அந்த ஆராய்ச்சியில் சற்று ஆழமாக இறங்குவோம்!
மெட்ரிகுலேஷன் தேர்வை நாக்பூரில் முடித்துவிட்டு மருத்துவப் படிப்பு படிக்க (ஹெட்கேவர்) கல்கத்தா போகிறார். இந்து மத வெறியரான அதே 'மூஞ்சி' என்ற பார்ப்பனர்தான் அவருக்கு இப்போது உதவி புரிகிறார். வன்முறை இயக்கங்களில் மிகவும் ஆர்வம் கொண்ட ஹெட்கேவர், கல்கத்தாவில் போய் படித்தால் இத்தகைய அமைப்புகளோடு தொடர்பு கொள்ள முடியும் என்று விரும்பினார். மராட்டிய மன்னர் சிவாஜியும், திலகரும் இவரின் ஞானத் தந்தைகள்!
1910-ம் ஆண்டிலிருந்து 1915-ம் ஆண்டு வரை கல்கத்தாவில் மருத்துவக் கல்வி பயின்றபோது, இவர் தங்கிய விடுதிதான் மாணவர்களின் அரசியல் அரங்கங்களாக செயல்பட்டது. பல திவீரவாத இயக்கங்கள், புரட்சி இயக்கங்களைச் சார்ந்தவர்களும் அங்கே வருவதுண்டு.
இந்த கல்கத்தா வாழ்க்கைப் பற்றி, ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கிடும், ஆர்.எஸ்.எஸ்சின் அதிகாரபூர்வமான, சி.பி. பிஷிகார் என்பவரால் எழுதப்பட்ட நூல் பக்கம்-13 கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
"கல்கத்தா சென்றவுடன் ஹெட்கேவர் 'அனுசிஹிலன் சமிதி' என்ற அமைப்பின் நெருக்கமானஉறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆபத்துக்கள் நிறைந்த சில முக்கியமான வேலைகள்அவருக்குத் தரப்பட்டன. புரட்சியாளர்களுக்கு பயங்கரமான ஆயுதங்களை ரகசியமாக கொண்டு சென்றார்."என்று கல்கத்தா போன உடனேயே இவர் ஒரு புரட்சிக்காரராக மாறிவிட்டது போல, ஒரு தோற்றத்தைத்தந்து எழுதியிருக்கிறார்கள்.
ஆனால், உண்மை என்னவென்றால் வேறாக இருக்கிறது!
ஜே.ஏ. குர்ரான் (J.A.Cruuan) எழுதிய "Militant Hinduism in Indian Politics" நூலில்பக்கம்-13-ல் உண்மையை உடைத்துக் காட்டுகிறார்!
"கல்கத்தாவுக்கு ஹெட்கேவர் போனவுடன், புரட்சி இயக்கங்கள் அவருக்கு முக்கியத்துவம் எதுவும்தரவில்லை. கல்கத்தாவில் வாழ்ந்த காலத்தில், அவர் சிறைக்குச் சென்றதாக எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பிரிட்டிஷார் அவரை போலீஸ் காவலில் வைத்திருந்ததாக சொல்கிறார்கள். அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது." என்று ஹெட்கேவரின் 'புரட்சி' வாழ்க்கையின் புரட்டுகளை அம்பலப்படுத்திக் காட்டுகிறார்.
ஆபத்து தரக்கூடிய பல இரகசிய வேலைகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறுகிறார்களே தவிர, எந்த வேலையை செய்தார்? எங்கே தூது போனார்? எந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டு போனார்? என்பதற்கான விளக்கங்களை எதையுமே ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை!கல்கத்தாவில் சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டார் என்று அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கும் அவர்கள் கூச்சப்படவில்லை. 'ஹெட்கேவர்' வாழ்க்கை வரலாறும் - ஆர்.எஸ்.எஸ். வரலாறும் ஒன்றே என்கிறார்கள்; இந்த 'சத்திய கீர்த்திகள்.'
ஆனால், இந்த 'உத்தம' 'புத்திரர்'களின் கதைகள் பொய்மைகளின் மூட்டைகளாகவே இருக்கின்றன.
கல்கத்தாவில் மருத்துவ டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஹெட்கேவர் நாக்பூர் திரும்புகிறார்! அப்போது முதலாம் உலக மகாயுத்தம் துவங்கிவிட்டது. யுத்தத்தில் இங்கிலாந்தும் சம்பந்தப்படுகிறது!அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, உள்நாட்டிலே ஆயுதம் தாங்கிய புரட்சியை உருவாக்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.
முதலாம் உலக மகா யுத்தம் துவங்கியபோது, ஜெர்மன் மொழியைப் படிக்க ஆரம்பித்தவர்கள் இந்த நாட்டு பார்ப்பனர்கள்தான்! காரணம், ஜெர்மன்காரர்கள் கையில் இந்திய ஆட்சி வந்துவிடும் என்று நம்பி,அந்த ஆட்சியிலே தாங்கள் செல்வாக்குப் பெற்று விடலாம் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கிடந்தனர்!
ஜெர்மன் - பாசிச இயக்கத் தலைவர் ஹிட்லர் மீது ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடி அமைப்பையே, தங்கள் கொடியாக வைத்துக் கொண்டிருந்ததுதான் இந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டம்!"இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு ஹிட்லர்தான் குரு. காந்தியாருக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை இவர்கள் பரப்பி வந்தார்கள். சுதந்திரப் போராட்ட உணர்வுகள், மதச்சார்பின்மை ஆகியவற்றை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்தனர். ஜனநாயகத்தை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அது மேற்கத்திய நாடுகளின் இறக்குமதி என்றார்கள். அதே அளவுக்கு சோஷலிசத்தின் மீதும் அவர்களுக்கு வெறுப்பு உண்டு. காரணம், சோஷலிசம் இந்து கலாச்சாரத்துக்கு எதிரானது என்று அவர்கள் உணர்ந்தார்கள்.
காந்தியாரை ஒரு தலைவராகவே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.1965-ம் ஆண்டில்தான், மிகவும் சிரமத்தோடு வேறு வழியின்றி தங்களின் அன்றாடப் பிரார்த்தனையில் காந்தியார் பெயரையும் சேர்த்துக் கொண்டனர்."
நாம் மேலே எடுத்துக் காட்டியிருப்பது - மறைந்த சோஷலிஸ்ட் தலைவர் மதுலிமாயி அவர்கள் 'சண்டே'பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியைத்தான். (10.6.1979 சண்டே இதழ்) இந்தப் பின்னணியில் முதலாவது உலகப்போரை பயன்படுத்தி, உள்நாட்டில் ஆயுதப் புரட்சி நடத்திட, இவர் போட்ட திட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
ஹெட்கேவர் தனது திட்டம் பற்றி, இவரின் ஞானகுரு திலகரிடம் எடுத்துச் சொன்னபோது, அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று புறக்கணித்துத் தள்ளிவிட்டார்; இதற்கு எந்த முக்கியத்துவமும் திலகர் கொடுக்கவில்லை. திலகர் ஆதரவு இல்லை என்றவுடன், ஹெட்கேவரின் வீரமும் குறைந்தது.(இந்தக் கருத்துக்களை 'பிஷிகார்' தமது 'சங்நிர்மதா' நூல் பக்கம் 13-ல் விளக்குகிறார்.)
"நாக்பூருக்கு திரும்பிய ஹெட்கேவர், இந்து மகாசபையில் தான் சேர்ந்து விட்டதாகவும், அந்த அமைப்புக்குத் தேவையான நூல்கள், வெளியீடுகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அவரே தனது நண்பர்களிடம் கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோற்றத்துக்கான எண்ண ஓட்டங்கள் இந்தக்காலத்தில்தான் அவருக்கு உருவானது."
"அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியிலும் இந்து மகா சபையிலும் ஒரே நேரத்தில், வேலை செய்கிறார்! ராஷ்டிரிய உத்சவ மண்டல் என்ற அமைப்பிலும் தீவிரமாகப் பங்கெடுத்தார். 'அக்ஹதா' என்ற மாணவர் அமைப்பிலும், பொதுக் கூட்டங்கள் - மாநாடுகளிலும் பங்கெடுத்துக் கொண்டார்." என்ற தகவல்களை'பிஷிகார்' தமது நூலில் குறிப்பிடுகிறார்.
இவர் அப்போது தீவிரமாகப் பங்கெடுத்த 'ராஷ்டிரிய உத்சவ மண்டல்' என்ற அமைப்பு ஒரு வன்முறை அமைப்பாகும்.
இந்த வகுப்பு வெறிக் கும்பல் மகாராஷ்டிர மாநிலத்தில் பிவாண்டி என்ற இடத்தில் மிகப்பெரிய வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவிட்டு நடத்தியதற்காக, மேடன் விசாரணைக் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கும்பலாகும்!ஒரே நேரத்தில் இந்து மகாசபையிலும் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்து இரட்டை உறப்பினராக பணியாற்றும்முறை அப்போது இருந்திருக்கிறது! பின்னர் அது ஒரு பிரச்சனையாக வெடித்துக் கிளம்பியபோதுதான் 1934-ம் ஆண்டு அதில் இந்திய காங்கிரஸ் 'இரட்டை உறுப்பினர் முறையை' தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியது.
மூத்த தலைவர்கள் பலருடன் ஹெட்கேவர் தொடர்பு கொண்டிருந்தாலும் ஒருவர்கூட இவரின் ஆயுதம் தாங்கியப் போராட்ட திட்டத்திற்கு ஆதரவு தரத் தயாராக இல்லை என்று எழுதுகிறார் 'பிஷிகார்' தனது நூலில் (பக்-27)

No comments: