Sunday, March 2, 2008

சிவனடியார் ஆறுமுகசாமி மீது பார்பணர்கள் கொலை வெறி தாக்குதல்.


சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாட சிவனடியார் ஆறுமுகசாமி சென்ற போது போலீசாருக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. தாக்கப்பட்டார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாட சிவனடியார் ஆறுமுகசாமி முயன்றார். அதற்கு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தடை பிறப்பித்தார். ஆனால் ஆறுமுகசாமி தரப்பில் இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் பூஜை காலங்களைத் தவிர பிற நேரங்களில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அறநிலையத் துறை செயலரிடம் தீட்சிதர்கள் மீண்டும் மேல் முறையீடு செய்தனர். நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடலாம் என்று கடந்த 29ம் தேதி அறநிலையத் துறை செயலர் சந்தானம் உத்தரவிட்டார். தீர்ப்பின்படி சிவனடியார் ஆறுமுகசாமி நேற்று தமிழில் பாட தயாரானார். அவருடன் மாவட்ட மனித உரிமை கழகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் நேற்று தெற்கு வீதியில் கூடினர்.
இதனால் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப்குமார் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆறுமுகசாமி தெற்கு வீதியில் இருந்து யானை மீது அமர்ந்தபடி நடராஜர் கோவிலின் பாரம்பரிய இசை முழங்க அழைத்து வரப்பட்டார். கோவிலுக்குள் நுழைய முயன்ற ஆறுமுகசாமியைப் போலீசார் தடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக 3 பேர் மட்டுமே கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியும் என்றனர்.
இதனால் போலீசாருக்கும் ஆறுமுகசாமி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆறுமுகசாமி தரப்பினர் தெற்கு சன்னதி கோவில் நுழைவு வாயிலில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். 30 நிமிடம் தர்ணா போராட்டத்திற்கு பிறகு 25 பேர் செல்லலாம் என போலீசார் கூறினர். அதனைத் தொடர்ந்து காலை 11.25 மணிக்கு ஆறுமுகசாமி வக்கீல்கள் ராஜி செந்தில் உள்ளிட்ட 25 பேர் கோவிலுக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
ஆறுமுகசாமி தமிழில் தேவாரம் பாடுவதை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவிலுக்குள் குவிந்திருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் ஆறுமுகசாமி கோவிலில் உள்ள திருச்சிற்றம்பல மேடைக்கு நுழைய முயன் றார். அப்போது தீட்சிதர் தரப்பு வக்கீல்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசார் அரசு ஆணையை வக்கீல் களிடம் காட்டினர். அதனை தொடர்ந்து வக்கீல்கள் ஆறுமுகசாமி உள்ளே செல்ல ஒப்புக்கொண்டனர். ஆனால் ஆறுமுக சாமி மற்றும் போலீசாரை தீட்சிதர்கள் தடுத்தனர். அவர்களை எஸ்.பி. பிரதீப்குமார் விலக்கி விட்டார். அப்போது எஸ்.பி. பிரதீப்குமாரை தீட்சிதர்கள் சட்டையைப் பிடித்து கீழே தள்ளினர். இதனால் போலீசாருக்கும்- தீட்சிதர் களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் தீட்சிதர்களை அப்புறப்படுத்தினர்.தொடர்ந்து ஏ.எஸ்.பி. செந்தில்வேலன் மற்றும் போலீசார் கோவில் சம்பிரதாயப்படி சட்டையை கழற்றிவிட்டு ஆறுமுகசாமியை கோவிலுக்குள் மதியம் 12.04 மணிக்கு அழைத்து சென்றனர். அதனை 50க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீண்டும் தடுத்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தடுக்க வந்த தீட்சிதர்கள் அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக வெளியேற்றினர். தீட்சிதர்கள் போலீசாரை தாக்கி கடித்து குதறினர். இதில் சில போலீசார் காயம் அடைந்தனர். இந்த சம்பவங்களால் சிதம்பரம் நடராஜர் கோவில் போர்களம் போல காட்சியளித்தது.
சிற்றம்பல மேடைக்கு சென்ற ஆறுமுகசாமி தேவாரம் பாடிவிட்டு மீண்டும் பகல் 12.14 மணிக்கு வெளியே வந்தார். அப்போது கோவிலுக்குள் கூடியிருந்த மக்கள் தமிழுக்குக் கிடைத்த வெற்றி என்று கோஷங்கள் எழுப்பினர். ஆறுமுகசாமி தமிழில் தேவாரம் பாடுவதற்கு முன் கோவிலுக்குள் செல்லும் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் பலத்த சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். மூன்று முறை கீழே விழுந்த எஸ்.பி.திருச்சிற்றம்பல மேடையில் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி. பிரதீப்குமாரை தீட்சிதர்கள் பலவந்தமாக தள்ளி விட்டனர். இதில் அவர் மூன்று முறை படிகட்டில் இருந்து கீழே விழுந்தார். ஆனால் அருகில் இருந்து அவரது பாதுகாவலர் மற்றும் போலீசார் எஸ்.பி. தரையில் விழுந்துவிடாமல் தாங்கி பிடித்துக் கொண்டனர்.தீட்சிதர்களின் செயலைப் பார்த்த போலீசார் தனது உயர் அதிகாரியைப் பிடித்துத் தள்ளும் தீட்சிதர்களை ஒவ்வொருவராக குண்டுகட்டாக தூக்கி வந்து வெளியேற்றினர். எஸ்.பி.யைக் காப்பாற்ற சென்ற போலீசாரையும் தீட்சிதர்கள் கீழே தள்ளிவிட்டனர்.
தீட்சிதர்கள் மீது வழக்கு: விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வன்னியப்பெருமாள் சிதம்பரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆறுமுகசாமி உள்ளே செல்ல தீட்சிதர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர்.ஆறுமுகசாமி மற்றும் ஐந்து பேரை மிக வலுவோடு தீட்சிதர்கள் எதிர்த்தனர். அதனால் எஸ்.பி. மற்றும் ஏ.எஸ்.பி. தலைமையிலான போலீசார் ஆறுமுக சாமியைப் பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அதனை தீட்சிதர்கள் தடுத்ததால் சிறு கைகலப்பு ஏற்பட்டது. ஆறுமுகசாமி 15 நிமிடம் தேவாரம் பாடிவிட்டு வெளியே வந்தார். இதன்மூலம் அரசாணையை நிறைவேற்றியுள்ளோம். சிறப்பான போலீஸ் பாதுகாப்பால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அரசு பணியை செய்யவிடாமல் குறுக்கிடுதல் பலபிரயோகம் செய்தல் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரிந்த 10 தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல தீட்சிதர்கள் மீது வழக்கு தொடரப்படும். அரசு உத்தரவுபடி மீண்டும் தமிழில் தேவாரம் பாட சட்டம் ஒழுங்கு சாதகமாக உள்ள சூழ்நிலையில் பாதுகாப்பிற்கான அனுமதியை போலீசார் வழங்குவர்.இவ்வாறு வன்னியப்பெருமாள் கூறினார்.
தேவாரம் பாடவில்லை ஆறுமுகசாமி பேட்டி: ஹசிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடவில்லை' எனஇ ஆறுமுகசாமி கூறினார்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் போலீசாருக்கும் - தீட்சிதர்களுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவுக்கு இடையில் தேவாரம் பாடிய பின்னர் வெளியே வந்த ஆறுமுகசாமி கூறியதாவது:அரசு உத்தரவுபடி தமிழில் தேவாரம் பாட இன்று (நேற்று) நான் சென்றேன். ஆனால்இ எம்பெருமானை என்னால் பார்க்க முடியவில்லை. 20க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் வெள்ளி மேடையில் நின்று கொண்டு சாமி தரிசனம் செய்யவிடாமல் தடுத்துவிட்டனர். தீட்சிதர் தரப்பு வக்கீல்இ இங்கு வந்து தான் பாட வேண்டுமா என்று திட்டினார்.
தமிழை வளர்ப்போம்இ பாதுகாப்போம் என்று முதல்வரும் அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றனர். ஆனால்இ சிதம்பரத் தில் அரசு உத்தரவை செயல்படுத்த முடியவில்லை. நான் உள்ளே சென்று தேவாரம் பாடவில்லை. இது வெட்க கேடாக உள்ளது.என்னை தேவாரம் பாட தீட்சிதர்கள் விடவில்லை. உயிர் பிழைத்து வெளியே வந்துள்ளேன். போலீஸ் பாதுகாப்பு சரியில்லை. என்னை தீட்சிதர்கள் அடித்து என் மூக்கு கண்ணாடியைப் பிடுங்கிக் கொண்டனர். என் மக்களுடன் சென்று நான் தேவாரம் பாட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆறுமுகசாமிஆதரவாளர்கள் மீது போலீஸ் தடியடி:ஆறுமுகசாமி தரப்பினர் நேற்று பிற்பகல் முதல் மாலை வரை தெற்கு வீதிஇ கோவில் நுழைவு வாயிலில்இ கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால்இ அவர்கள் கேட்கவில்லை. அப்போதுஇ போலீசார் மீதுஇ ஆறுமுகசாமி தரப்பினர் கல் வீசினார். இதில்இ போலீஸ்காரர் ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் ஆவேசமடைந்த போலீசார்இ ஆறுமுகசாமி தரப்பினர் மீது திடீரென தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால்இ தெற்கு வீதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி நன்றி :www.dinamalar.com

4 comments:

Anonymous said...

கடவுள் இல்லைன்னு சொல்ற உங்களுக்கு அது என்ன மொழில இருந்தா தான் என்ன ?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மோதிப்பார் said...

கடவுள் இல்லைன்னு சொல்ற உங்களுக்கு அது என்ன மொழில இருந்தா தான் என்ன ?//

தமிழ் தான் நீசபாசை ஆச்சே அப்புறம் உனக்கு எதுக்குயா தமிழ்நாட்டுல கோயில்

மோதிப்பார் said...

டேய் அனானி உன்னோட பூனூல அத்து வீசுனா சரியா போகும்.உன்னோட உண்டகட்டி எல்லாம் எங்களுக்கு வேண்டாம் அங்கேயே உக்காந்து பஜன போடு